இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 8வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடமும், இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரோஹித் சர்மாவிற்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு, தற்போது ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. இரண்டு போட்டிகளிலும் பும்ராவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவே புதிய பந்தில் பந்துவீசினார். அதுவே மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. மேலும், சொல்லி கொள்ளும்படி ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. அதேசமயம் பும்ரா இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி அசத்தினார்.
இரண்டாவது போட்டியின் தோல்விக்கு பிறகு தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்ததும் சன்ரைசர்ஸ் வீரர்களுடன் மரியாதை நிமித்ததாக கைகுலுக்கினார். அப்போது, துணை பயிற்சியாளர்கள் வந்து கைகுலுக்கினர்.
மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்கா ஹர்திக் பாண்டியாவுடன் கைகுலுக்கி, கட்டிப்பிடிக்க வந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா, லசித் மலிங்காவுடன் கைகுலுக்கிய பிறகு, அவரை இடதுபுறம் தள்ளுவதை காணலாம். இதன்பிறகு, லசித் மலிங்காவின் முகம் மிகவும் மோசமாக மாறியது.
மற்றொரு நிகழ்வு:
இந்த போட்டியின்போது வெளியான மற்றொரு வீடியோவில், ஹர்திக் பாண்டியா, அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரன் பொல்லார்ட் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்கா ஆகியோர் காணப்படுகிறார்கள். அப்போது, ஹர்திக் பாண்டியா ஏதோ சொல்ல ஆரம்பித்தவுடன், லசித் மலிங்கா எழுந்து வெளியேறினார். இந்த வீடியோ தற்போது மிக வேகமாக பேசப்பட்டு வருகிறது.
மும்பை அணிக்கு வெற்றி தேவை:
ஐபிஎல் 2024ல் ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் தனது இரண்டு தொடக்க ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. இங்கிருந்து இன்னும் இரண்டு போட்டிகளில் அந்த அணி தோற்றால், பிளேஆஃப் சுற்றுக்கான பாதை மும்பைக்கு கடினமாகிவிடும். மும்பையின் அடுத்த போட்டி அதன் சொந்த மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் இந்த போட்டியில் தங்கள் சொந்த மைதானத்தில் முதல் வெற்றியை அடையும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால் இதுவரை இந்த சீசனில் எந்த அணி சொந்த மைதானத்தில் ஆட்டம் போட்டதோ அந்த அணி மட்டும் வெற்றி பெற்றுள்ளது.