ஐபிஎல் 2024 சீசன் 17 தொடங்க இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. போட்டியின் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே இரு அணிகளும் எந்தப் பதினொன்றுடன் விளையாடும், சேப்பாக்கத்தில் ஆடுகளம் எப்படி இருக்கும், இருவரில் யார் வெற்றிக்கான வலுவான போட்டியாளர்? என இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் கீழே பதிலளித்துள்ளோம். 


பிட்ச் எப்படி..?


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டி இன்று நடக்கிறது. இந்த மைதானத்தின் பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் சாதகமானதாகவே இருக்கும். இதன் காரணமாக, எதிரணி பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய திணறுவார்கள். பெங்களூரு பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கை உடைக்க மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் மகிஷ் திக்ஷானா போன்ற சில தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் சென்னை அணியில் உள்ளனர். 


போட்டி கணிப்பு:


ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 31 போட்டிகள் நடந்துள்ளன. இதில், அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 போட்டிகளிலும், அதேசமயம் ஆர்சிபி 10 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவடையாமல் முடிந்தது. இரு அணிகளும் சேப்பாக்கத்தில் 8 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. இதில் சென்னை 7 போட்டிகளிலும், பெங்களூரு 1 போட்டியிலும் வென்றுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்று நமது கணிப்பு மீட்டர் கூறுகிறது. 


போட்டிக்கு இடையே மழைக்கு வாய்ப்பா..?


நேற்று வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, சென்னையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, சென்னையில் ராமபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்தது. இந்தநிலையில், இன்று வானிலை இயல்பானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பெங்களூரு vs சென்னை போட்டியில் மழை இருக்காது. ஆனால் மைதானத்தில் ஈரப்பதம் 75 சதவீதமாக இருக்கும். இது வீரர்களுக்கு பிரச்சனையாக மாறும் என்று கூறப்படுகிறது. போட்டியின் போது வெப்பநிலை 31 டிகிரியாக இருக்கலாம் மற்றும் மணிக்கு 18 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுப்பதே சிறந்தது. ஏனென்றால், இரண்டாவது இன்னிங்ஸின்போது இலக்கை துரத்துவது கடினமாகிவிடும். 


கணிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்:


ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே/சமீர் ரிஸ்வி, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், மஹிஷ் டீக்ஷான் மற்றும் முஸ்தாஃப் ரஹ்மான் ஆகியோர்  சென்னை சூப்பர் கிங்ஸின் லெவன் ஆடலாம் .


கணிக்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:


விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, முகமது சிராஜ், யாஷ் தயாள்/ஆகாஷ் ஜோசப் தீப் மற்றும் அல்சாரி ஜோசப் .