IPL 2024 Points Table: குஜராத் உடனான தோல்விக்குப் பிறகும் ராஜஸ்தான் அணி, ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விவரம்:

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகளமாக நடைபெற்று வருகிறது, தற்போது வரை  24 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான  போட்டியில் குஜராத் அணி  3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டபோது, கடைசி பந்தில் பவுண்டரி உட்பட 3 பவுண்டரிகளை விளாசி, ரஷித் கான் வெற்றியை ஈட்டி தந்தார். இதனால் அவர் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பது கீழே அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ளது..

எண்அணிபோட்டிகள்வெற்றிதோல்விபுள்ளிகள்
1 ராஜஸ்தான் ராயல்ஸ்5418
 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்4316
3லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்4316
4சென்ன சூப்பர் கிங்ஸ்5326
5சன்ரைசர்ஸ் ஐதராபாத்5326
6 குஜராத் டைட்டன்ஸ்6336
 பஞ்சாப் கிங்ஸ்5234
8மும்ப இந்தியன்ஸ்4132
9ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்5142
10டெல்லி கேபிடல்ஸ்5142

இன்றைய போட்டி:

இன்று நடைபெறும் தொடரின் 25வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்  மற்றும் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோத உள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ள மும்பை  அபாரமான அணி  வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில், நான்காவது 7வது இடத்திற்கு முன்னேறக்கூடும். ஒருவேளை 9வது இடத்தில்  உள்ள பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் 7வது இடம் வரை முன்னேறக்கூடும்.  ஐபில் போட்டிகளின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

பிளே-ஆஃப் சுற்று:

தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் லீக் சுற்றில் தலா 14 போட்டிகளில் விளையாடும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். புள்ளிகள் சமநிலையை அடைந்தால் ரந்ரேட் அடிப்படையில் அணிகள் பட்டியலிடப்படும். இதன் காரணமாக மிக மோசமான தோல்விகளை தவிர்க்கவும், பெரும் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் ஒவ்வொரு அணியும் ஆர்வம் காட்டுகிறது. அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடும். வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் எலிமினேட்டரில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறும். அந்த அணியும், முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்ற அணியும் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.