SRH vs LSG, 1 Innings Highlights: இறுதியில் அதிரடி காட்டிய ஹைதராபாத்.. லக்னோவுக்கு 183 ரன்கள் இலக்கு..!

IPL 2023, SRH vs LSG: 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணி சார்பில் குர்னல் பாண்டியா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Continues below advertisement

IPL 2023, SRH vs LSG: ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்கரம் தனது அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். 

Continues below advertisement

அதன்படி ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை அபிஷேக் சர்மா மற்றும் அன்மோல்ப்ரீத் தொடங்கினர். இருவரும் மிகவும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் கவனமாகவே ஆடினர். ஆனால் போட்டியின் மூன்றாவது ஓவரில் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழக்க, அதன் பின்னர் ராகுல் த்ரிப்பாட்டி களமிறங்கி அதிரடியாக விளையாடினார். ஆனால் அவரும் பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் தனது விக்கெட்டை இழக்க, பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் சேர்த்தது. 

அதன் பின்னர் கைகோர்த்த அன்மோல்ப்ரீத் மற்றும் கேப்டன் மார்க்கரம் நிதான ஆட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசினர். இதனால் ஹைதராபாத் அணியின் ரன்ரேட் சீராக உயர்ந்தது. ஆனால் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய அன்மோல்ப்ரித் தனது விக்கெட்டை அமித் மிஸ்ரா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். இவர் 27 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார்.

அதன் பின்னர் குர்னல் பாண்டியா பந்து வீச்சில் ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்கரம் மற்றும் ப்லிப்ஸ் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். இதனால் போட்டியில் லக்னோ அணியின் ஆதிக்கம் சிறிது நேரம் இருந்தது. ஆனால் 15 ஓவருக்குப் பின்னர் அதிரடியாக ஆடத் தொடங்கிய ஹைதராபாத் அணியின் சமத் மற்றும் க்ளாஸனால் 16 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. குறிப்பாக க்ளாஸன் அமித் மிஸ்ரா ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்கள் பறக்க விட மைதானம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரத்தில் ஆர்ப்பரித்தனர். இருவரும் 37 பந்தில் 53 ரன்கள் சேர்க்க ஹைதராபாத் அணி சவாலான இலக்கை நிர்ணயம் செய்ய உதவியது. ஆனால் அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட க்ளாஸன் 47 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

அதன் பின்னர் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணி சார்பில் குர்னல் பாண்டியா 2 விக்கெட்டுகளும் அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான், யுத்வீர், யாஷ் தக்கூர் தலா ஒரு விக்கெட்டு கைப்பற்றினர். ஹைதராபாத் அணி சார்பில் அன்மோல்ப்ரீத் 36 ரன்களும், க்ளாஸன் 47 ரன்களும், இறுதி வரை களத்தில் இருந்த சமத் 37 ரன்களும் எடுத்து இருந்தனர். 

Continues below advertisement