சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2019 ம் ஆண்டு பிறகு தனது சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்புகின்றனர். பொதுவாக சென்னை அணியை பொறுத்தவரை பாலாஜி, பொலிஞ்சர், அல்பி மார்க்கல், ஹில்பினாஸ், மோகித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, பிராவோ, தீபக் சஹார், முகேஷ் சவுத்ரி என வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும், சுழற்பந்து வீச்சாளர்களில் ஆதிக்கமே நிரம்பி வழிந்தது. 


முத்தையா முரளிதரன், ரவிசந்திரன் அஸ்வின், சாமுவேல் பத்ரி, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, ஹர்பஜன் சிங், பவான் நெகி, ஜடேஜா என பெரிய ஸ்பின் பட்டாளமே சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர் என்று சொல்லலாம். 


அந்த வகையில், ஐபிஎல் 2023 சீசனில் சென்னை அணியின் ஸ்பின் பலத்தை பற்றி மிக தெளிவாக இங்கு பார்க்கலாம். 


சுழல் சிங்கங்கள்:


ஏப்ரல் 8ம் தேதி முடிவடையும் நியூசிலாந்து மற்றும் இலங்கை இடையிலான ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கு பிறகுதான் மஹீஷ் தீக்ஷனா மற்றும் மதீஷா பத்திரனா ஆகியோர் சென்னை அணிக்கு திரும்புகின்றனர். 


மஹீஷ் தீக்ஷனா கடந்தாண்டு சென்னை அணிக்காக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், இந்தாண்டு   ஹரியானாவின் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் நிஷாந்த் சிந்து மற்றும் சத்தீஸ்கர் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அஜய் மண்டல் ஆகியோர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஸ்பின்னில் பக்கபலமாக இருக்கின்றனர். 


மிரட்டும் ஜடேஜா:


மஹீஷ் தீக்ஷனா நியூசிலாந்து தொடருக்கு பிறகு களமிறங்குவதால், இவர்களில் யாரேனும் ஒருவரை ஜடேஜாவுடன் தோனி களமிறக்குவார். சென்னை அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களாக மஹீஷ் தீக்ஷனா மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோருக்கு எம்.எஸ்.தோனி சரியாக வழிகாட்டினால், இது இவர்களுக்கு அனுபவமாகவும், சிஎஸ்கே அணிக்கு வெற்றியையும் பெற்றுதரும். 


சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் அபாரமாக செயல்பட்டு வருகிறார். அந்த ஃபார்மை இங்கு தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த சுழற்பந்த் வீச்சாளராக விளங்கிவரும் மொயின் அலி, கடந்த சீசனில் சென்னை அணிக்காக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கினார். அதன் அடிப்படையிலும் இவர் மீது அதிகபடியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சென்னை அணியில் கிட்டத்தட்ட அனைத்து வகையான ஸ்பின் - மிஸ்டரி ஸ்பின், லெக்ஸ்பின், ஆஃப்ஸ்பின், இடது கை விரல் சுழல் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். 


யார் யார் அணியில்..? 


காயம் அடைந்த கைல் ஜேமிசனுக்குப் பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் சிசண்டா மகலா, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 2 ஆம் தேதிகளில் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சென்னை அணியில் தாமதமாக இணைவார். 


ராபின் உத்தப்பாவின் ஓய்வால் மிடில் வரிசையில் யாரை இறக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவம் துபே சிறந்த ஆல் ரவுண்டர்களாக ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது. சென்னை அணியின் முதல் தேர்வு வீரர்களான கெய்க்வாட் மற்றும் சாஹர் காயத்திலிருந்து திரும்பியுள்ளனர். பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் பங்காற்றினாலும், பந்துவீச்சில் அவரது பங்களிப்பு இன்னும் உறுதியாகவில்லை. 


வருகிற மே 6ம் தேதி சேப்பாக்கத்தில் மும்பை அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்லில் 1000வது போட்டியாகும். 


சென்னை அணி விவரம்:


எம்.எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, பகத் வர்மா, தீபக் சாஹர், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, சிசண்டா மகலா, அஜய் மண்டல், முகேஷ் சௌத்ரி, மதீஷா பத்திரனா, டுவைன் பிரிட்டோரியஸ், அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், அம்பதி ராயுடு, மிட்செல் சான்ட்னர், சுப்ரான்ஷு சேனாபதி, சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, பென் ஸ்டோக்ஸ், மஹீஷ் தீக்ஷனா