ஐபிஎல் தொடரில் மிகவும் கவனிக்கப்படும் போட்டிகளில் ஒன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியும் ஒன்று. இம்முறை இரு அணிகளும் வேறு வேறு குழுக்களில் இடம் பெற்றுள்ளதால் ஒரு போட்டி மட்டுமே லீக் சுற்றில் இரு அணிகளும் மோதும். இந்த போட்டி இன்று (ஏப்ரல் 17) பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது. 


இந்த போட்டி தொடக்கம் முதல் அதிரடியாக சென்று கொண்டு இருந்தது. சென்னை அணியின் அபாரமான பேட்டிங்கால், இன்றைய போட்டியில் இந்த பவுலர் சிறப்பாக பந்து வீசினார் என அடையாளம் காட்ட முடியாதபடி ரன்களை வாரி வழங்கியதுடன். விக்கெட்டுகளும் வீழ்த்த சிரமப்பட்டனர். 18 ஓவர்களிலேயே சென்னை அணி 200 ரன்களை கடந்து இருந்தது. இந்நிலையில் போட்டியின் கடைசி ஓவரை ஹர்சல் பட்டேல் வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார்.  இரண்டாவது பந்தை நோபால வீச, அதற்கு ஃப்ரி - ஹிட்டும் வழங்கப்பட்டது. மூன்றாவது பந்தை வைடாக வீச, அதற்கு ரீ - பால் வீசினார். அந்த பந்தையும் நோ -பாலா வீசினார். 


ஐபிஎல் போட்டி விதிகளின் படி, பவுலர் ஒரே ஓவரில் இரண்டு நோ- பால் வீசினால், அவர் அந்த போட்டியில் மேற்கொண்டு பந்து வீச முடியாது. இதனால், ஹர்சல் பட்டேலால் அந்த ஓவரை முழுமையாக வீச முடியவில்லை. அதனால், அந்த ஓவரின் அடுத்த நான்கு பந்துகளை மேக்ஸ்வெல் வீசினார். ஹர்சல் பட்டேல் 3.2 ஓவர்களில் ஒரு விக்கெட் எடுத்து 36 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார்.