Hardik vs Krunal:  ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக  சகோதர்கள் இரு அணிகளின் கேப்டன்களாக நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர். அது நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றொருவர் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் குர்னல் பாண்டியா. இருவரும் சகோதர்கள். அதாவது குர்னல் பாண்டியா அண்ணன், ஹர்திக் பாண்டியா தம்பி. ஐபிஎல் வரலாற்றில் சகோதர்கள் இரண்டு அணிகளின் கேப்டன்களாக இருந்து நேருக்கு நேர் மோதிக் கொள்வது இது தான் முதல் முறை. 


சகோதரர்கள்:


இந்நிலையில் இந்த போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திரமோடி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் குர்னல் பாண்டியா பந்து வீச முடிவு செய்தார். அதன் பின்னர் ஹர்திக் பாண்டியாவிடம் சகோதரர்களான நீங்கள் இருவரும் கேப்டன்களாக நேருக்கு நேர் மோதிக் கொள்வதை எப்படி உணர்கிறீர்கள் என கேட்ட கேள்விக்கு, ”எங்கள் குடும்பத்திற்கு ரொம்ப எமோஷனலாக இருக்கும். இது எங்களது தந்தைக்கு மிகவும் பெருமையான தருணமாக இருக்கும். எப்படியும் ஒரு பாண்டியா வெற்றி பெருவார்” என கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா இவ்வாறு கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  இர்வர்களின் தந்தை மறைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டதால் குர்னல் பாண்டியாவிடம் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


புள்ளிப்பட்டியல் விவரம்:


குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ரஷித்கான் மற்றும் நூர் அஹமத்தின் சிறப்பான பந்துவீச்சாள் குஜராத் அணி வெற்றிபெற்றது.  அதேபோல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை கடைசியாக நடந்த நான்கு போட்டிகளில் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றாலும், புள்ளிகள் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.  இதனிடையே,  முதல் முறையாக தம்பி ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக அண்ணன் க்ருணால் பாண்டியா கேப்டனாக இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.


நேருக்கு நேர்:


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 3 முறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அந்த மூன்று முறையும் குஜராத் அணியே வெற்றிபெற்றுள்ளது. இதனால், குஜராத் அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்து வருகிறது.


2022 ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக மோதின. அந்த முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் 2022ம் ஆண்டில் பிளே ஆஃப்களில் மோதியது. அதிலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  இந்த ஐபிஎல் சீசனிலும் லக்னோ அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.