ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.


மும்பை - குஜராத் மோதல்:


ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதன் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


மும்பை அணி நிலவரம்:


மும்பை அணி நடப்பு தொடரில் இதுவரை 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியில் கேமரூன் கிரீன், டிம் டேவிட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆனால், மோசமான பந்துவீச்சு தான் அந்த அணியின் பெரிய பிரச்னையாக உள்ளது.


சரியான டெத் பவுலர்கள் இல்லாமல் மும்பை அணி திணறி வருகிறது. கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் மும்பை அணி வெல்ல பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம்.


குஜராத் அணி நிலவரம்:


குஜராத் அணி நடப்பு தொடரில் இதுவரை 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை குவித்தாலும் கடந்த சில போட்டிகளில் குஜராத் அணி சற்றே தடுமாறி உள்ளது. சுப்மன் கில், விஜய் சங்கர் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்க, ஷமி, ரஷித் கான் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், வெறும் 135 ரன்களை மட்டுமே அடித்தாலும் லக்னோ அணியை 128 ரன்களுக்கு சுருட்டி குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது.


மைதானம் எப்படி?


நரேந்திர மோடி மைதானம் ஒரு நடுநிலையான களமாகவே உள்ளது. போட்டியின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும், நேரம் போக போக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் செயல்படும். 175 ரன்களுக்கும் அதிகமான இலக்கு என்பது விரட்டுவதற்கு சற்றே கடினமானது தான்.


சிறந்த பேட்ஸ்மேன் - இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்


சிறந்த பந்துவீச்சாளர் - இன்றைய போட்டியில் மோகித் சர்மா பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்


வெற்றி வாய்ப்பு யாருக்கு - சேஸ் செய்யும் அணி வெற்றி பெறவே அதிகப்படியான வாய்ப்பு