ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் கேப்டன் டூபிளசிஸ் 73*ரன்களும், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்தார். இதன்காரணமாக 20 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 192 ரன்கள் எடுத்தது. 


இதைத் தொடர்ந்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி மற்றும் எய்டன் மார்க்கரம் ஆகியோர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 8 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. 


 






அப்போது எய்டன் மார்க்கரம் ஹசரங்கா பந்துவீச்சில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரண் 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி தன்னுடைய அரைசதத்தை கடந்து அசத்தினார். இவர் 37 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் விளாசி 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கார்த்திக் தியாகி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 


அதன்பின்பு 17வது ஓவரில் ஹசரங்கா இரண்டு விக்கெட் வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்காரணமாக சன்ரைசர்ஸ் அணி 19.2 ஓவர்களில் 125 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆர்சிபி அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண