ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா 43 மற்றும் இஷான் கிஷன் 45 ஆகியோர் அதிரடி காட்டினர். கடைசி கட்டத்தில் டிம் டேவிட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 41* ரன்கள் எடுத்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 177 ரன்கள் எடுத்தது.


இதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில் மற்றும் விருத்திமான சாஹா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதனால் முதல் 6 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி வந்த சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் 12 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 106 ரன்கள் குவித்தது. 




சுப்மன் கில் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த போது முருகன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் விருத்திமான் சாஹா 40 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு பின்பு வந்த சாய் சுதர்ஷன் 14 ரன்களில் ஹிட் விக்கெட் முறைஇல் ஆட்டமிழந்தார். இதனால் 16 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்திருந்தது. குஜராத் அணி வெற்றி பெற இன்னும் 24 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்டது. 


 


அப்போது களத்தில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் இருந்தனர். இவர்கள் இருவரும் அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகினார். கடைசி 12 பந்துகளில் குஜராத் அணி வெற்றி பெற 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆட்டத்தின் 19 ஓவரை அனுபவ வீரர் பும்ரா வீசினார். அந்த ஓவரில் டேவிட் மில்லர் சிறப்பாக ஒரு சிக்சர் விளாசினார். கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை சாம்ஸ் வீசினார். அவர் சிறப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இதனால் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண