ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் அந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டிகள் நடைமுறை மீறியதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து இவருடன் விசாரணை நடத்தப்பட்டது. அதில் தினேஷ் கார்த்திக்கும் ஐபிஎல் லெவல் 1 பிரிவு விதியை மீறியுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
லெவல் 1 விதிமுறை மீறலுக்கு போட்டியின் ரெஃபரீயின் முடிவுதான் இறுதியானது. எனினும் அவர் எதற்காக விதிமுறையை மீறினார் என்பது தொடர்பாக தெளிவாக வெளியிடப்படவில்லை. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜாத் பட்டிதார் உடன் இணைந்து தினேஷ் கார்த்திக் இறுதி கட்டத்தில் அதிரடி காட்டினார். இவர் 23 பந்துகளில் 37* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் நடப்புத் தொடரில் 15 போட்டிகளில் 324 ரன்கள் அடித்துள்ளார். இதன்காரணமாக அவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இவர் இடம்பிடித்துள்ளார். இவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்ததற்கு பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அடுத்த வாரம் 37 வயதை எட்ட உள்ள தினேஷ் கார்த்திக் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்