Mohammed Shami: ஷமிக்கு கொலை மிரட்டல்! 1 கோடி கேட்டு வந்த இ-மெயில்.. அதிர்ந்து போன குடும்பம்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு 1 கோடி கேட்டு வந்த கொலை மிரட்டல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்த நிலையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகமது ஷமி:
ஒரு வருட காயத்திற்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஷமி, பெங்கால் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார். அதற்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் கலந்துக்கொண்டார். அதன் பின்னர் துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியிலும் அவர் ஒரு பகுதியாக இருந்தார்.
ஐபிஎல் 2025 ஏலத்தில் முகமது ஷமி சன்ரைசர்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் காயத்துக்கு பிறகு ஷமியால் பெரிய அளவில் ஃபார்மில் இல்லை. ஒன்பது ஆட்டங்களில் விளையாடிய ஷமி ஆறு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். கடந்த ஐபிஎல் சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சன்ரைசர்ஸ் அணிபிளேஆஃப் தகுதிக்கான போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது. 10 ஆட்டங்களில் மூன்று வெற்றிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
கொலை மிரட்டல்:
இந்த நிலையில் முகமது ஷமியின் இ-மெயிலுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது, அந்த இ-மெயிலில் ஷமியிடம் ₹ 1 கோடி மீட்கும் தொகையை கோரியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஷமி உடனடியாக தனது சகோதர் ஹசீப் அகமது தகவல் கொடுத்துள்ளார். ஹசீப் இந்த விவகாரம் தொடர்பாக அம்ரோஹா காவல்துறையினரிடம் எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளதார். இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் அம்ரோஹா எஸ்.பி., இந்த விவகாரத்தை விசாரிக்க சைபர் செல் காவல்துறையினரிடம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் (BNS), 2023 பிரிவு 308(4), தகவல் தொழில்நுட்ப (திருத்தம்) சட்டம், 2008 பிரிவு 66d மற்றும் தகவல் தொழில்நுட்ப (திருத்தம்) சட்டம், 2008 பிரிவு 66e ஆகிய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது,
அந்த விசாரணையில் மின்னஞ்சலை அனுப்பியவர் ராஜ்புத் சிந்தார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கம்பீருக்கு கொலை மிரட்டல்:
முன்னதாக, மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக நம்பப்படும் 21 வயது பொறியியல் மாணவரிடமிருந்து கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் குஜராத்தைச் சேர்ந்த ஜிக்னேஷ்சிங் பர்மர் என அடையாளம் காணப்பட்டார். காவல்துறையினரின் தகவல்ப்படி, ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 அப்பாவி மக்களைக் கொன்ற நாளில், பர்மாரிலிருந்து கம்பீருக்கு அஞ்சல்கள் வந்தன. பின்னர் பர்மர் கைது செய்யப்பட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்




















