டி20 உலகக் கோப்பை:


கடந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது இந்திய அணி. அந்த வகையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.


ஆனால் லீக் போட்டிகள் வரை தோல்வியே பெறாத அணியாக இருந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது ரசிகர்களை வருத்தம் அடையச்செய்தது. இதன் பின்னர் இந்திய கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.






இதனைத் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இச்சூழலில் தான் தற்போது ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகிறது.


இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு எப்போது?


அதேநேரம் இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி முதல்  நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.


இந்நிலையில் தான் 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்தியன் கிரிக்கெட் அணி ஏப்ரல் கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.






இது தொடர்பாக ஐசிசி வட்டாரம் கூறுகையில், “ ஐ.பி.எல் முதல் பாதி முடிந்து வீரர்களின் உடற்தகுதியை அடிப்படையாகக் கொண்டு தேசிய தேர்வுக் குழுவால் ஏப்ரல் கடைசி வாரத்தில் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளது. மேலும்,” மே 19 ஆம் தேதி ஐ.பி.எல் இறுதிப் போட்டிகள் முடிந்த உடன் முதல் பேட்ச் கிரிக்கெட் வீரர்கள் நியூயார்க்கிற்குப் புறப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.


இதனிடையே இந்திய டி20 அணியில் யார்? யார்? இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அதேநேரம் இந்திய அணியில் விராட் கோலி ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


 


மேலும் படிக்க: LSG Vs PBKS, IPL 2024: தோல்வியில் இருந்து மீளப்போவது யார்? லக்னோ - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்


 


மேலும் படிக்க: IPL 2024 Points Table: முதலிடத்தில் தொடர்ந்து சிஎஸ்கே.. ரன் மழை பொழியும் விராட் கோலி.. முழு அப்டேட் இதோ!