iIPL 2024: கேப்டன் ஷிகர் தவான் செய்த தவறால் பஞ்சாப் அணி, ஐதராபாத்திற்கு எதிராக வெற்றி வாய்ப்பை இழந்ததாக ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.


ஐதராபாத் - பஞ்சாப் மோதல்:


ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. மொகாலி அடுத்த முல்லன்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 37 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக அப்துல் சமாத் 25 ரன்களையும், தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 21 ரன்களயும் சேர்த்தனர்.


தவான் செய்த தவறு:


போட்டிய்ன் முதல் பந்தை ககிசோ ரபாடா வீச, தொடக்க வீரரான ட்ராவிஸ் ஹெட் எதிர்கொண்டார். அப்போது, பந்து பேட்டை கடக்கும்போது ஒருவித சத்தம் எழுந்தது. விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா உடனடியாக விக்கெட்டிற்கு முறையிட்டார். ஆனால், ககிசோ ரபாடா அரைமனதுடன் முறையிட்டார் இதையடுத்து டிஆர்எஸ் எடுப்பது குறித்து கலந்தாலோசித்தபோது, ஜிதேஷ் சர்மா பந்து பேட்டில் பட்டதாக கூறினார். ஆனால், தனக்கு உறுதியாக தெரியவில்லை என ரபாடா தெரிவித்தார். அதையேற்ற தவான், டிஆர்எஸ் முடிவை கைவிட்டார். ஆனால், ரீப்ளே செய்து பார்க்கையில் பந்து பேட்டில் பட்டது உறுதியானது. இதனால், போட்டியின் முதல் பந்த்லேயே டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பை டிஆர்எஸ் எடுக்காமல் பஞ்சாப் அணி தவறவிட்டது.






ரசிகர்கள் புலம்பல்:


அந்த ரீப்ளேவை பார்த்த பிறகு டிராவிஸ் ஹெட்டை போன்று தங்களுக்கும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, விக்கெட் கீப்பர் சொன்னதை தவான் கேட்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.










 


பஞ்சாப் போராடி தோல்வி:


இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். சாம் கரன் மற்றும் சிகந்தர் ராஜா ஆகியோர் அணியை சர்வில் இருந்து மீட்டனர். இறுதிக்கட்டத்தில் சஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடி முறையே 46 மற்றும் 33 ரன்களை  சேர்த்தது.கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்த கூட்டணியால் 26 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால், 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியுற்றது.டிராவிஸ் ஹெட் விக்கெட்டிற்கு டிஆர்எஸ் எடுத்து இருந்தால், இந்த போட்டியில் வெற்றி பெற்று இருக்கலாம் என பஞ்சாப் ரசிகர்கள் ஆறுதல் பேசி வருகின்றனர்.