ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்க உள்ள, பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குஜராத் - லக்னோ மோதல்:
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 51வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரில் இந்த இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில், குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், அதற்கு பழிவாங்கும் நோக்கில் க்ருணால் பாண்ட்யா தலைமையில் லக்னோ அணி களமிறங்குகிறது. aதேநேரம், கேப்டன் ராகுல் இல்லாமல் களமிறங்குவது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த சூழலில், லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்க உள்ள, பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கைல் மேயர்ஸ், டி காக், மனன் வோஹ்ரா, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருணால் பாண்டியா (கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), யாஷ் தாக்கூர், ஸ்வப்னில் சிங், ஆயுஷ் படோனி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான் மற்றும் ஆவேஷ் கான்
இம்பேக்ட் பிளேயர்ஸ்
ஆயுஷ் பதோனி, டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, மன்கத், யுத்விர் சிங்
குஜராத் டைட்டன்ஸ்:
சுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அபினவ் மனோகர், நூர் அகமது, மோகித் சர்மா, முகமது ஷமி
இம்பேக்ட் பிளேயர்ஸ்
அல்ஜாரி ஜோசப், தசுன் சனகா, கே.எஸ். பரத், சிவம் மாவி, ஜெயந்த் யாதவ்
புள்ளிப்பட்டியல் விவரம்:
குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ரஷித்கான் மற்றும் நூர் அஹமத்தின் சிறப்பான பந்துவீச்சாள் குஜராத் அணி வெற்றிபெற்றது. அதேபோல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை கடைசியாக நடந்த நான்கு போட்டிகளில் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றாலும், புள்ளிகள் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. இதனிடையே, முதல் முறையாக தம்பி ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக அண்ணன் க்ருணால் பாண்டியா கேப்டனாக இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.
நேருக்கு நேர்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 3 முறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அந்த மூன்று முறையும் குஜராத் அணியே வெற்றிபெற்றுள்ளது. இதனால், குஜராத் அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்து வருகிறது. 2022 ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக மோதின. அந்த முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் 2022ம் ஆண்டில் பிளே ஆஃப்களில் மோதியது. அதிலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஐபிஎல் சீசனிலும் லக்னோ அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.