ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்க உள்ள வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.


IPL 2023 GTvsKKR: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரில் ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவிடம் தோல்வியை சந்தித்த, குஜராத் அணி அதற்கு இன்று பழிவாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஐபிஎல் 16வது சீசன்:


ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் களமிறங்கியுள்ள 10 அணிகள் அனைத்தும் புள்ளிப் பட்டியலில்  முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெற மும்மரமாக விளையாடி வருகின்றன. இதில் ஏற்கனவே டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் தொடர் தோல்வியால் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. 


குஜராத் கொல்கத்தா மோதல்:


மற்ற 8 அணிகளில் 4 அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் அணிகளாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நடப்புச் சாம்பியனும் பலமான அணியுமான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியின்  நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். இந்நிலையில் இரு அணிகளுக்காக வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


கொல்கத்தா அணி வீரர்கள்:


குர்பாஸ், ராணா, ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், நரைன், வெங்கடேஷ் அய்யர், டேவிட் வீசே, ஜெகதீஷன், ஷர்தூல் தாக்கூர், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


சுயாஷ் சர்மா, மந்தீப் சிங், அனுகுல் ராய், டிம் சவுதி, குல்வந்த் கெஜ்ரோலியா


குஜராத் அணி வீரர்கள்:


 ஹர்திக் பாண்ட்யா, அபினவ் மனோகர், டேவிட் மில்லர், விஜய் சங்கர், திவேத்தியா, விரிதிமான் சாஹா, ரஷித் கான், ஷமி, மோஹித் சர்மா, நூர் அஹ்மத், ஜோஷ்வா லிட்டில்


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


சுப்மன் கில், கே.எஸ். பரத்,  சாய் சுதர்ஷன், ஷிவம் மாவி, ஜெயந்த் யாதவ்


இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 


நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி அதில் மூன்றி மட்டுமே வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.  இந்த தொடரில் கொல்கத்தா பெற்ற வெற்றி என்றால் அது பெங்களூரு அணிக்கு எதிரான 2 போட்டிகளும், குஜராத் அணிக்கு எதிரான ஒரு போட்டியும் தான். குஜராத் அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியது கொல்கத்தா அணிக்கு பலமான விசயமாக உள்ளது. இன்றைய போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுவதால் கொல்கத்தா அணி வெற்றிக்கு தங்களை தயார் படுத்தும் பணிகளில் மும்மரமாக இருக்கிறது. 


இதுவரை குஜராத் டைட்டன்ஸ் 


 இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி இரண்டு போட்டிகளில் மட்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள குஜராத் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்குச் செல்லும்.