ஐபிஎல் 2022 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. மற்ற அணிகள் அனைத்தும் தங்களுடைய வெற்றி கணக்கை தொடங்கியுள்ளன. 


இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது வரை பிடிக்கப்பட்ட சிறப்பான கேட்ச்கள் என்னென்ன?


அம்பாத்தி ராயுடு: 


சென்னை-பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி பேட்டிங்கின் போது அக்‌ஷ்தீப் விக்கெட்டை ரவீந்திரா ஜடேஜா எடுத்தார். ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை அக்‌ஷ்தீப் லேசாக தூக்கி அடித்தார். அந்தப் பந்தை அம்பத்தி ராயுடு டைவ் அடித்து சிறப்பாக கேட்ச் பிடித்து அசத்தினார். இந்தக் கேட்ச் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. 


 






ராகுல் திரிபாதி:


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் சுப்மன் கில் விக்கெட்டை எடுத்தார். அப்போது சுப்மன் கில் அடித்த பந்தை ராகுல் திரிபாதி ஒரு கையில் டைவ் அடித்து சிறப்பாக பிடித்தார். இந்த கேட்ச் சமூக வலைதளத்தில் வேகமாக வைரலானது. 


 






குல்தீப் யாதவ்:


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் உமேஷ் யாதவ் விக்கெட்டை குல்தீப் யாதவ் எடுத்தார். அப்போது பந்துவீசிய குல்தீப் யாதவ் பின்னால் ஓடி அசத்தலாக உமேஷ் யாதவ் கொடுத்த கேட்சை பிடித்தார். இந்தக் கேட்ச் பார்ப்பதற்கு சிறப்பாக அமைந்தது. 


 






சுப்மன்கில்:


குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எவின் லுயிஸ் விக்கெட்டை வருண் ஆரோன் எடுத்தார். வருண் ஆரோன் வீசிய பவுண்சர் பந்தை எவின் லுயிஸ் அடித்தார். அந்தப் பந்தை சுப்மன்கில் ஓடி சென்று லாவகமாக பிடித்தார். இந்தக் கேட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 


 






இப்படி தற்போது வரை ஐபிஎல் தொடரில் சில சிறப்பான கேட்ச்கள் பிடிக்கப்பட்டன. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண