கடந்த ஆண்டு நடந்த ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றவுடன் ஏகப்பட்ட கிண்டல் கேளிகள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அரங்கேறிய சம்பவங்கள் நடந்தது. 


கடந்த சீசன்: 


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிரான முக்கியமான போட்டி கடந்த ஆண்டு மே 18 ஆம் தேதி நடந்தது. இந்தப்போட்டியில் வெற்றி பெறும் அணி தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி என்கிற நிலை இருந்தது. அந்த போட்டியில் சென்னை அணி 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டி இருந்தது. 


ஆனால் சென்னை அணி அந்த போட்டியில் 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது, அந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பெங்களூரு அணி மைதானத்தில் ஐபிஎல் கோப்பையே ஜெயித்தது போல ஆக்ரோஷமாக கொண்டாடினர். 


எல்லை மீறிய ஆர்சிபி ரசிகர்கள்


ஆனால் அன்றைய போட்டிக்கு ஆர்சிபி அணியின் சின்னச்சாமி மைதானத்திற்கு வெளியே பயங்கர கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். சென்னை அணி ரசிகர்கள மிக மோசமாக அன்றைய போட்டிக்கு பின்னர் பெங்களூரு அணி ரசிகர்கள் நடத்தினர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 


ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர்: 


இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொகுப்பாளரான சஸ்திகாவை ஆர்சிபி ரசிகர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக யூடியுப் நேர்க்காணலில் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் அன்றைய போட்டிக்கு பிறகு ரசிகர்களிடம் பேட்டி எடுப்பதற்காக மைதானத்திற்கு வெளியே சென்றதாகவும் அப்போது அங்கு இருந்த சில ஆர்சிபி ரசிகர்கள் தனக்கு கன்னடம் தெரியாது என நினைத்து தகாத வார்த்தைகளால் பேசினர்.






அது என்னை மிகவும் காயம் படுத்தியது, அதனால் இப்போ உங்க கிட்ட ஒரெ ஒரு கோரிக்கையே வைக்கிறேம் நீங்க எந்த அணியின் ரசிகரா கூட இருங்க, போட்டியில் சண்டை எல்லாம் இருக்கலாம்  ஆனால் தயது உங்களின் தவறான வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்தாதீங்க என்றார். 


பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே?


கடந்த ஆண்டு நிகழ்ந்த தோல்விக்கு சென்னை அணி இன்று நடைப்பெறும் போட்டியில் பலித்தீர்க்குமா என்பதை பொறுத்திருந்து காணலாம்.