CSK VS RCB DHONI: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது விக்கெட்டிற்கு களமிறங்கியதை சாடி மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

9வது இடத்தில் தோனி:

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. அதிரடியாக விளையாட முயன்ற சிஎஸ்கே வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். முன்கூட்டியே இறங்கி அதிரடியாக ரன் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தோனி, 9வது இடத்தில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய வந்தார்.  ஆனால் அது மிகவும் தாமதமானதாக இருந்ததால்,  பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவரது அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனியை சாடும் நெட்டிசன்கள்:

197 ரன்களைத் துரத்திய சி.எஸ்.கே. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. 13வது ஓவரில் சிவம் துபே ஆட்டமிழந்தபோது தோனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டபோது அஸ்வின் களமிறங்கினார். அவர் ஆட்டமிழந்து 16வது ஓவரில் தோனி களமிறங்கியபோது, கிட்டத்தட்ட போட்டி சென்னை அணியை விட்டு முழுமையாக நழுவிவிட்டது. அவர் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், ஆனால் அது போட்டியின் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஃபினிஷராக கருதப்படும் தோனி, மிகவும் தாமதமாக களமிறங்கியதை ரசிகர்கள் விரும்பவில்லை. இதற்கு அவர் மரியாதையுடன் ஓய்வையே எடுத்துக்கொள்ளலாம் என சாடி வருகின்றனர். இர்ஃபான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் கூட, தோனி 9வது வீரராக களமிறங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.

குவியும் விமர்சனங்கள்: