மேலும் அறிய

Sakib Hussain: நகையை விற்ற தாய்.. சாப்பாட்டுகே வழியில்லை... ஐபிஎல் அறிமுகத்திலேயே அசத்தல்: யார் இந்த சாகிப் ஹுசைன்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமான சாகிப் ஹுசைன், 4 ஓவர்கள் வீசி வெறும் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளர் சாகிப் ஹுசைன், தனது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

கனவுத் தொடக்கம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமான சாகிப் ஹுசைன், 4 ஓவர்கள் வீசி வெறும் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவருடன் இணைந்து மற்றொரு அறிமுக வீரரான பிரஃபுல் ஹிங்கே என்பவரும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். ஒரே போட்டியில் இரு அறிமுக வீரர்கள் அசத்தியது ஹைதராபாத் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வறுமையின் பிடியில் இளமைக்காலம்

சாகிப் ஹுசைனின் இந்த வெற்றிக்கு பின்னால் கண்ணீரும், போராட்டமும் நிறைந்த ஒரு கதை ஒளிந்திருக்கிறது. பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சாகிப், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஒருவேளை உணவிற்கே வழியில்லாத நாட்களைக் கடந்துதான் அவர் இன்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்."அவன் எப்போதுமே எங்கள் குடும்பத்தின் நிதி நிலைமையை உணர்ந்தே இருந்தான். ஒருவேளை உணவை ஏற்பாடு செய்வதே எங்களுக்குப் பெரும் போராட்டமாக இருந்த நாட்கள் உண்டு" என சாகிப்பின் தந்தை உருக்கமாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நகையை விற்ற தாய்.. மகனின் தாகம்!

சாகிப்பின் கிரிக்கெட் பயணத்தில் அவரது தாயின் தியாகம் அளப்பரியது. சாகிப்பிற்கு கிரிக்கெட் விளையாட ஷூக்கள் தேவைப்பட்டபோது, அவரிடம் பணம் இல்லை. மகனின் ஏக்கத்தைக் கண்ட தாய், தனது நகைகளை விற்று மகனுக்குத் தேவையான கிரிக்கெட் ஷூக்களை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த ஒரு ஜோடி ஷூக்கள்தான் இன்று அவரை ஐபிஎல் மேடை வரை கொண்டு வந்து சேர்த்துள்ளது.

ராணுவம் டூ கிரிக்கெட்

ஆரம்பத்தில் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே சாகிப்பின் லட்சியமாக இருந்தது. ஆனால், நண்பர்களின் தூண்டுதலால் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவருக்கு, அதில் இருந்த வேகம் மற்றும் திறமை ஒரு புதிய பாதையைக் காட்டியது. அதன் பின்னரே அவர் தொழில்முறை கிரிக்கெட் வீரராக உருவெடுத்தார்.

ஐபிஎல் பயணம்

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது (வாய்ப்பு கிடைக்கவில்லை). அதன் பின்னர் இந்த  மினி ஏலத்தில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.30 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பீகார் அணிக்காக விளையாடியபோது ஸ்கவுட்களின் பார்வையில் விழுந்த சாகிப், இன்று தனது முதல் வாய்ப்பிலேயே தன்னை நிரூபித்துள்ளார். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தந்தையின் உடல்நலக் குறைவு, வறுமை என அனைத்தையும் கடந்து வந்துள்ள சாகிப் ஹுசைன், பல இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

VCK Thiruma: 25 வருட காத்திருப்பு..! புறக்கணித்த (அ)திமுக - விசிகவை அமைச்சரவையில் இணைத்த CM விஜய்
VCK Thiruma: 25 வருட காத்திருப்பு..! புறக்கணித்த (அ)திமுக - விசிகவை அமைச்சரவையில் இணைத்த CM விஜய்
Kader Moideen IUML : விஜய் அமைச்சரவையில் ஐயூஎம்எல்.! திமுக கூட்டணி முறிந்ததா.? காதர்மொய்தீன் முக்கிய அறிவிப்பு
விஜய் அமைச்சரவையில் ஐயூஎம்எல்.! திமுக கூட்டணி முறிந்ததா.? காதர்மொய்தீன் முக்கிய அறிவிப்பு
US Iran War: “விரும்பத்தகாத காரியங்களை செய்வோம்“ - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
“விரும்பத்தகாத காரியங்களை செய்வோம்“ - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
TN Cabinet: ”ஆதி திராவிடர், சிறுபான்மை நலன்” விசிக, IUML-க்காக கதவு திறந்து காத்திருக்கும் சிஎம் விஜய் - திருமா?
”ஆதி திராவிடர், சிறுபான்மை நலன்” விசிக, IUML-க்காக கதவு திறந்து காத்திருக்கும் சிஎம் விஜய் - திருமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?
Cockroach Janta Party|’’சோம்பேறிகளுக்கு முன்னுரிமை’’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி..விசித்திர பின்னணி!
Vijay CV Shanmugam | ”அமைச்சர் பதவி கிடையாது”CV சண்முகம் TEAM-க்கு செக்..முடிவாக சொன்ன விஜய்?
Savukku Shankar | குண்டாஸ் ரத்து!சவுக்கு சங்கர் ரிலீஸ்?விஜய் அதிரடி உத்தரவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK Thiruma: 25 வருட காத்திருப்பு..! புறக்கணித்த (அ)திமுக - விசிகவை அமைச்சரவையில் இணைத்த CM விஜய்
VCK Thiruma: 25 வருட காத்திருப்பு..! புறக்கணித்த (அ)திமுக - விசிகவை அமைச்சரவையில் இணைத்த CM விஜய்
Kader Moideen IUML : விஜய் அமைச்சரவையில் ஐயூஎம்எல்.! திமுக கூட்டணி முறிந்ததா.? காதர்மொய்தீன் முக்கிய அறிவிப்பு
விஜய் அமைச்சரவையில் ஐயூஎம்எல்.! திமுக கூட்டணி முறிந்ததா.? காதர்மொய்தீன் முக்கிய அறிவிப்பு
US Iran War: “விரும்பத்தகாத காரியங்களை செய்வோம்“ - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
“விரும்பத்தகாத காரியங்களை செய்வோம்“ - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
TN Cabinet: ”ஆதி திராவிடர், சிறுபான்மை நலன்” விசிக, IUML-க்காக கதவு திறந்து காத்திருக்கும் சிஎம் விஜய் - திருமா?
”ஆதி திராவிடர், சிறுபான்மை நலன்” விசிக, IUML-க்காக கதவு திறந்து காத்திருக்கும் சிஎம் விஜய் - திருமா?
TN Ministers Portfolio : புதிய அமைச்சர்கள் 23 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு.! யாருக்கு எந்த துறை.? இதோ முழு விவரம்
புதிய அமைச்சர்கள் 23 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு.! யாருக்கு எந்த துறை.? இதோ முழு விவரம்
TVK Ministers Age: 40+ வயதில் 22 அமைச்சர்கள்..! 60 வயதை கடந்த 4 பேர் - சிஎம் விஜய் அமைச்சரவையின் வயது விவரம்
40+ வயதில் 22 அமைச்சர்கள்..! 60 வயதை கடந்த 4 பேர் - சிஎம் விஜய் அமைச்சரவையின் வயது விவரம்
Honda Activa e Vs QC1: ஹோண்டாவுக்கு ஹோண்டாவுக்கும் போட்டி; ஆக்டிவா இ, க்யூசி1; விலை, ரேஞ்ச், அம்சங்களில் எது சிறந்தது.?
ஹோண்டாவுக்கு ஹோண்டாவுக்கும் போட்டி; ஆக்டிவா இ, க்யூசி1; விலை, ரேஞ்ச், அம்சங்களில் எது சிறந்தது.?
Scooter vs Bike Mileage: ஸ்கூட்டர விட பைக்கோட மைலேஜ் அதிகமா இருக்கேன்னு எப்பவாவது யோசிச்சுருக்கீங்களா.? காரணம் இதுதான்
ஸ்கூட்டர விட பைக்கோட மைலேஜ் அதிகமா இருக்கேன்னு எப்பவாவது யோசிச்சுருக்கீங்களா.? காரணம் இதுதான்
Embed widget