சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்:
மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகின்றன, இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதாக அறிவித்தார். சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு த்ரிப்பாதிக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டார்.
பட்டாசை வெடித்த ஆயுஷ் மாத்ரே:
சிஎஸ்கேவுக்கு தொடக்கம் நல்லப்படியாக அமையவில்லை, ரச்சின் ரவீந்திர 5 ரன்களுக்கு வெளியேற இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே களமிறங்கினார். சின்ன பையன் தானே என்ன ஆடப்போறான் எதிர்ப்பாத்துக்கொண்டிருந்த போது, வந்த முதல் பந்தில் இருந்த அதிரடியாக விளாச ஆரம்பித்தார், தனது சந்தித்த இரண்டாவது பந்தில் பவுண்டரி அடிக்க, அதே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பார்க்கவிட்டு சென்னை அணிக்கு தேவையான் இண்டெண்டை கொடுத்தார்.
தொடர்ந்து பவுண்டரிகளை விளாசிய மாத்ரே தீபக் சாஹர் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்துவிட்டு கேட்ச் கொடுத்து அவுட்டானர், ஆனால் அவரது அதிரடி ஆட்டம் ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார், இதில் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும்.
அவர் ஆட்டமிழந்து செல்லும் போது மும்பை வீரர் சூர்ய குமார் யாதவ் தட்டிக்கொடுத்து அனுப்பினார்.
யார் இந்த ஆயுஷ் மாத்ரே?
ஆயுஷ் மாத்ரே மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். 17 வயது இளம் வீரர், ஆவார். கடந்த சீசன் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் (2024-2025) மும்பை அணிக்காக அறிமுகமானார். 16 இன்னிங்ஸில் 504 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார் மாத்ரே. விஜய் ஹசாரே கோப்பையில் (List A) 7 போட்டிகளில் 458 ரன்களை எடுத்த அவர் மகாராஷ்டிராவுக்கு எதிரான ஒரு போட்டியில் 176 ரன்களை எடுத்து அசத்தினார். 22 பவுண்ட்ரிகள், 4 சிக்ஸர் இதில் அடங்கும். அதேபோல, லிஸ்ட் A கிரிக்கெட்டில் 150+ ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.