ஊக்கமருந்து விதிகளை மீறியதாக இரண்டு ஆண்டுகளுக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மார்கருக்கு தடை விதிக்கப்பட்டு அதை அவர் எதிர்கொண்டு வருவதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.


2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் 4ஆவது இடம் பிடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் தீபா கர்மாகர்.


ஊக்கமருந்து விதிகளை மீறியதால் அவர் தற்போது 2 ஆண்டு தடைக் காலத்தை அனுபவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


2016-ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் முதல்முறையாக பங்கேற்று ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்த திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர். ஒலிம்பிக் போட்டியொன்றில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற முதல் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஆவார்.


ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் போட்டியில் வால்ட் ஜம்ப் போட்டியில் 15.066 புள்ளிகள் எடுத்து நான்காவதாக வந்தார்; மூன்றாவதாக வந்த சுவிட்சர்லாந்தின் கியுலியா இசுடெய்ன்கிருபர் பெற்ற 15.216ஐ விட 0.015 புள்ளிகளில் மயிரிழையில் வெங்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார்.


மேலும் இவர் 2015 ஆண்டு சப்பானில் நடந்த ஏ.ஆர்.டி.ஆசிய சீருடற்பயிற்சி போட்டிகளில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்தச் சாதனைகள் மூலமாக இந்தியாவில் சீருடற்பயிற்சியில் மிக இளவயதில் சாதனைப் படைத்தவர்.


ஏப்ரல் 2016 அன்று இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் சீருடற்பயிற்சி விளையாடுக்காகக் கலந்து கொள்ளத் தகுதி சுற்றில் 52.698 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக்கில் கந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றார்.


இதன்மூலம் கடந்த 52 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து சீருடற்பயிற்சி விளையாட்டில் கலந்துகொள்ளும் முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவரானார்.



  • 2016ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

  • 2017ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.