பாரா ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் பி-1 பிரிவில் இந்திய ஆண்கள் அணியினர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். அஸ்வின், தர்பன், சௌந்தர்ய பிரதான் ஆகியோர் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
இன்று நடைபெற்ற ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இனானியின் வெற்றி உலக அளவில் இந்தியாவின் சிறப்பான திறமைக்கு சான்றாகும் என்றார். இதுகுறித்து X இல் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது, “ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் செஸ் பி1 பிரிவில் (தனிநபர்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக தர்பன் இனானிக்கு வாழ்த்துகள்.
அவரது அசைக்க முடியாத வலிமையும் உறுதியும் அவருக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி, உலக அரங்கில் இந்தியாவின் சிறப்பான திறமையையும் வெளிக்காட்டியது.” என்றார்.
கிஷன் கங்கொல்லி, ஆர்யன் ஜோஷி மற்றும் சோமேந்திராவின் இந்திய பாரா செஸ் அணி 2023 ஆம் ஆண்டு ஆசிய பாரா கேம்ஸ் ஆண்கள் அணி ரேபிட் VI-B2/B3 நிகழ்வில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளது. கிஷன் கங்கொல்லி 2023 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் ரேபிட் செஸ் VI-B2/B3 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.