லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் சாலை விபத்திற்கு நேற்று உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ANI செய்தி நிறுவனம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்தது. 


இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை இந்திய விமானப்படையின் விமானங்கள் மூலம் மேற்கு பகுதியின் ராணுவ தலைமையிடத்திற்கு எடுத்து செல்லும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. 26 ராணுவ வீரர்களுடன் சென்று கொண்டிருந்த இந்த வாகனம் லடாகின் துர்துக் பகுதியில் சென்று போது நீரில் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்திற்கான காரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.






இந்த விபத்தில் சுமார் 19 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து நேற்று காலை 9 மணியளவில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த வாகனம் 50-60 அடி ஆழத்தில் இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விபத்து எதிர்பாராதவிதமாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்று ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 






இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை கேட்டு மனவேதனை அடைந்ததாக பதிவிட்டுள்ளார். அவர் பதிவில், "நமது வீரம் மிக்க வீரர்களின் உயிரிழப்பு குறித்து கேள்விப்பட்டு மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண