இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணி வெற்றி பெற 276 ரன்கள் தேவைப்பட்டது.


சேஸிங் செய்த இந்திய அணிக்கு, சூர்யகுமார் யாதவ் ரன்களை சேர்க்க மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டெயில் எண்டராக களமிறங்கிய தீபக் சஹார், 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.






கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்கிய போட்டியில்,டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தஸீன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கையின் அவிஸ்கா பெர்னாண்டோ, மினட் பனுகா ஜோடி துவக்க வீரர்களாக களம் இறங்கினர். 13 ஓவர்கள் நிறைவு பெற்ற நிலையில்,ஒரு விக்கெட் கூட இந்திய பவுலர்கள் எடுக்க முடியாமல் திணறினர். அதே நேரத்தில் இந்திய பந்து வீச்சை இலங்கை துவக்க வீரர்கள் எளிதில் அணுகினர். இந்த நிலையில் ஆட்டத்தில் 14வது ஓவரை வீசிய சஹால், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதனால், சஹாலுக்கு ஹாட்-ட்ரிக் வாய்ப்பு கிடைத்தது. எனினும், ஹாட்-ட்ரிக் பந்து டாட் பந்து ஆனதால், ஹாட்-ட்ரிக் எடுக்கும் வாய்ப்பை சஹால் தவறவிட்டார். மினட் பனுகா 42 பந்துக்கு 36 ரன்களும், பனுகா ராஜபக்சே முதல் பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.






அதனை தொடர்ந்து, அவிஷா ஃபர்ண்டாண்டோ மட்டும் சிறப்பாக ஆட, அரை சதம் கடந்தபோது ஆட்டமிழந்தார். மற்றொரு பேட்ஸ்மேனான சரித் அஸ்லாங்காவின் பொறுப்பான ஆட்டத்தால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 6 பவுண்டரிகள் விளாசிய அவர், 65 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சமிகா கருணரத்னே 44 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 275 ரன்கள் எடுத்தது.


இந்த இலக்கை சேஸ் செய்த இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ப்ரித்வி ஷா, ஷிகர் தவன் ஆகியோர், இந்திய அணி 40 ரன்கள் எடுப்பதற்குள் ஆட்டமிழ்ந்தனர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், மனிஷ் பாண்டே ஆகியோரு சுமாராக பேட்டிங் ஆடினர்.


சூர்யகுமார் யாதவ் மட்டும் களத்தில் நின்று விளையாட, 6 பவுண்டரிகளை அடித்த அவர் அரை சதம் கடந்தார். எனினும், இந்திய அணி வெற்றி பெற அதிக ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் டக்கவுட்டாகி பெவிலியன் திரும்பினார். க்ருணால் பாண்டியா, தீபக் சஹார் ஜோடி சுதாரித்து கொண்டு ஆட, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இன்றைய போட்டியில், கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார் தீபக் சஹார். 






49.1 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து இந்திய அணி போட்டியை வென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.


மேலும், இந்த போட்டியில் பெற்றதால், இந்திய அணி புதிய ஒரு சாதனையை படைத்துள்ளது. ஒரு தனிப்பட்ட அணிக்கு எதிராக ஒரு அணி பெற்ற அதிகபட்ச ஒருநாள் போட்டி வெற்றி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.


இந்திய அணியும், இலங்கை அணியும் இதுவரை 160 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் இந்திய அணி 92 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 56 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 ஆட்டம் டையில் முடிந்துள்ளது. 11 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால், ஒரு தனிப்பட்ட அணிக்கு எதிராக ஒரு கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் பெற்ற வெற்றி என்ற சாதனையை படைத்துள்ளது.