ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளுக்கு உலக கோப்பை நடத்துவது போல டெஸ்ட் போட்டிகளுக்கும்  உலக சாம்பியன்ஷிப் நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டது. இதையடுத்து, கடந்த இரு ஆண்டுகளாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வந்தது. சமீபத்தில் இந்தியா வந்த இங்கிலாந்து அணியுடனான தொடரை வென்றதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது.


இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வரும் ஜூன் 18-ந் தேதி மோத உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுதாம்ப்டன் நகரில் நடைபெற உள்ள இந்த போட்டியில் கடைபிடிக்கப்பட உள்ள புதிய விதிகள் குறித்து ஐ.சி.சி. இன்று அறிவித்துள்ளது. இதன்படி, இந்த போட்டி டிராவில் முடிந்தால் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள்.




IPL 2021 | அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகள் - மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்




இந்த போட்டிக்கான ரிசர்வ் நாள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் 5 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மழை, நேர இழப்பு உள்ளிட்ட காரணத்தால் நேர இழப்பு ஏற்பட்டால், அதை ஈடு செய்வதற்காக இந்த ரிசர்வ் நாள் பயன்படுத்தப்பட உள்ளது. போட்டியில் முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நாள் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படாது.




இந்திய அணியினர் அதிகமாக விளையாடிய எஸ்.ஜி. பந்துகளோ, நியூசிலாந்து அணியினர் அதிகமாக விளையாடிய கூக்கபுரா பந்துகளோ இந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்படாது. அதற்கு பதிலாக கிரேட் 1 டியூக் பந்துகளே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்கள் ரன் ஓடும்போது கிரீசைத் தொடாமல் ஓடினால் மூன்றாவது நடுவர் தாமாக அதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அந்த முடிவை கள நடுவர்களுக்கு, அடுத்த பந்து வீசுவதற்குள் அறிவிப்பார்.


எல்.பி.டபிள்யூ அவுட் குறித்து பீல்டிங் அணியின் கேப்டன் டி.ஆர்.எஸ். அப்பீல் செய்யும் முன் களத்தில் உள்ள அம்பயரிடம் பந்து கால்காப்பில் பட்டதா? என்ற தனது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம். எல்.பி.டபிள்யூ அவுட் வழங்கும் முறையில் கணக்கிடப்படம் ஸ்டம்பின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பந்த ஸ்டெம்ப் பெயில்ஸ் பாதிப்பகுதியை தொடுமாறு சென்றாலும் அது எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல, ஸ்டெம்பின் உயரம் மட்டுமின்றி, பரப்பளவிலும் பாதியளவுக்கு பந்து உரசிச்சென்றாலும் எடுத்துக்கொள்ளப்படும்.




இந்த இறுதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணியினர் அங்கு தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.