உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத இருக்கும் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் விவரத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.


கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்



கே.எல் ராகுல், சாஹா ஆகியோர் உடற்தகுதி நிரூபணம் செய்யவேண்டும். சப்ஸ்டியூட் வீரர்களாக அபிமென்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நக்வஸ்வல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரையும் கருத்தில், கொண்டு, இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இம்முறை 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக 4 வீரர்கள் சப்ஸ்டியூட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.