ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய ஆண்கள் அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் 2 - 0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.


ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஸ்சிப் போட்டியில், ஆடவருக்கான இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) மோதின.


ஆரம்ப முதலே அதிரடியாக ஆடிய பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் முன்னிலை வகித்தது. அதையடுத்து, இரண்டாவது சுற்றில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், இந்திய அணி தீவிரமாக ஆடியது. ஆனால், அதற்கு பாகிஸ்தான் அணி, அதற்கு இடம் கொடுக்காமல் இரண்டாவது சுற்றிலும் முன்னிலை வகித்தது. 


இதையடுத்து, 2 - 0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.