லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கோலியைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டாப் ஆர்டரும், மிடில் ஆர்டரும் சரிந்த நிலையில் டெயில் எண்டராக களமிறங்கிய ஷர்துல் தாகூர் அரை சதம் கடந்து அசத்தியுள்ளார்.

3 சிக்சர், 7 பவுண்டரிகள் உள்பட 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவுட்டாகினார் ஷர்துல் தாகூர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை டி20 போட்டியைப் போல விளையாடிய ஷர்துல், இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள்:

ரோஹித் 11
ராகுல் 17
புஜாரா 4
கோலி 50
ஜடேஜா 10
ரஹானே 14
பண்ட்  9
ஷர்துல்  57
உமேஷ் யாதவ் 10
பும்ரா 0
சிராஜ் 1*

முதல் இன்னிங்ஸில், கோலியைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தனர். டாப் ஆர்டர் சொதப்பவே, மிடில் ஆர்டர் களமிறங்கிய பேட்ஸ்மேன்களுக்கு ரன் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இந்த போட்டியில், புஜாரா வழக்கம் போல் 4 ரன்களுக்கு ஆண்டர்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் போட்டியில் புஜாராவை அவுட் செய்ததன் மூலம் அவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11 முறை ஆண்டர்சென் அவுட் செய்துள்ளார். 

டாப் ஆர்டரும், மிடில் ஆர்டரும் சரிந்த நிலையில் டெயில் எண்டராக களமிறங்கிய ஷர்துல் தாகூர் அரை சதம் கடந்து அசத்தியுள்ளார்.3 சிக்சர், 7 பவுண்டரிகள் உள்பட 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவுட்டாகினார் ஷர்துல் தாகூர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை டி20 போட்டியைப் போல விளையாடிய ஷர்துல், இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால், முதல் இன்னிங்ஸ் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் eடுத்தது இந்திய அணி.