உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி வீரர்கள் தங்களை திறமையை வெளிப்படுத்தியது திருப்தியளிப்பதாக இருந்ததாகவும், நியூசிலாந்து அணியுடன் இன்னும் சிறப்பாக விளையாடியிருந்தால் அது தொடரில் போக்கை மாற்றியிருக்கும் என்றும் கேப்டன் ஹம்ரீத்மன் சிங் தெரிவித்துள்ளார்.


15- ஆவது ஹாக்கி உலக கோப்பை தொடர் ஜனவரி மாதம் 13 ம் தேதி தொடங்கி, ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இறுதிப்போட்டி இன்றிரவு ஏழு மணிக்கு தொடங்குகிறது. ஜெர்மனி, பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. இதில் இந்தியா நாக்-அவுட் சுற்றிலேயே வெளியேறி ரசிர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.15ஆவது ஹாக்கி உலக கோப்பை தொடர் ஜனவரி மாதம் 13 ம் தேதி தொடங்கி, ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


 நாக்- அவுட் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. உலக ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்தியா 6-வது இடத்திலும், நியூசிலாந்து 12-வது இடத்திலும் இடத்திலும் உள்ளன. எந்தவித தேவையில்லாத தவறுக்கும் இடம் கொடுக்காமல் இந்திய அணி விளையாடினால், எளிதில் காலிறுதிக்கு தகுதி பெற முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இவ்விரு அணிகளும் இதுவரை 44 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 24-ல் இந்தியாவும், 15-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.


இது தொடர்பாகா மனம் திறந்துள்ள கேப்டன் ஹம்ரீத்மன் சிங், “ நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடியிருந்தால் அன்றைய போட்டியின் முடிவு வேறாக இருந்திருக்கும் என்றும் அவர் செய்தியாளர் சந்தித்திப்பில் தெரிவித்தார்.


இந்தத் தொடரில்,  இந்திய அணி  வெற்றி பெறும் வாய்ப்பை இழந்திருந்தாலும், வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது நல்ல விதமாகவே இருந்தது. எங்கள் அணியின் செயல்பாட்டினைப் பாராட்டுவதாகவும் ஹம்ரீத்மன் சிங் தெரிவித்தார். ஒட்டுமொத்தமான எங்களின் பங்களிப்பு திருப்தி அளிப்பதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 


” தொடரின் ஒவ்வொரு போட்டியிலும், முடிந்த அளவிற்கு எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இதிலிருந்து பாடம் கற்றிருக்கிரோம். எங்கெல்லாம் கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறதோ அதைச் சரி செய்து கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க..


Australian Open 2023: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்


U19 Womens T20 WC Final Live: இங்கிலாந்துக்கு எதிரான யு 19 மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி: 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்