டி20 உலகக் கோப்பை முதல் சுற்று ஆட்டத்தில் உலக புகழ் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியை சவுதி அரேபியா வீழ்த்தியது. இது கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வெற்றிக்கு பிறகு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது தோழர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சவுதி அரேபியாவின் வெற்றியைக் கொண்டாடினார். முன்னதாக, சவுதி அரேபியா அரசு வெற்றியைக் கொண்டாடும் வகையில் கடந்த திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவித்தது. அதன் பிறகு, தற்போது சவுதி அரேபியா அரசாங்கம் மற்றொரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


அர்ஜென்டினாவுக்கு எதிரான சவுதி அரேபிய அணி வெற்றி பெற்ற பிறகு, அந்த கால்பந்து அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா RM6 மில்லியன் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் வழங்கப்படும் என சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.






சவுதி அரேபியா வெற்றி:


முன்னாள் சாம்பியனான அர்ஜெண்டினாவை 2 - 1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தியது.


அன்றைய நாள் ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் நட்சத்திரக் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கோல் அடித்த நிலையில், 1 -0 என்ற கணக்கில் ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.


ஆனால் அதன் பின் அர்ஜெண்டினா தடுமாறிய நிலையில், ஆட்டத்தின் 48, 54ஆவது நிமிடங்களில் சவுதி அரேபிய அணியின் அல்ஷெரி, அல்டவ் சராய் ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து அதிரடியாய் கோல் அடித்து சவுதி அரேபிய அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர்.


ரோல்ஸ் ராய்ஸ்: 


சவுதி அரேபியாவின் அரசாங்கம் தங்கள் கால்பந்து அணி வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் வழங்குவது இது முதல் முறை அல்ல. கடந்த 1994 ஆம் ஆண்டு பெல்ஜியத்திற்கு எதிராக ஒரு கோலை அடித்த அதன் முன்கள வீரர் சயீத் அல்-ஓவைரனும் ரோல்ஸ் ராய்ஸ் பரிசாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சவுதி அரேபியா குழு C பிரிவில் முதலிடத்தில் உள்ளன.  உலகக் கோப்பை தொடரில் சவுதி அரேபியா தனது இரண்டாவது போட்டியில் நாளை போலந்தை எதிர்கொள்கிறார்கள்.