FIFA WORLDCUP 2022: பரபரப்பான உலகக்கோப்பை போட்டியில் கோல்டன் பூட்டை தவறவிட்டாலும், ஒட்டு மொத்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதற்காக கோல்டன் பந்தை வென்றுள்ளார்.
22வது உலகக்கோப்பையின் பரபரப்பான இறுதிப்போட்டி நேற்று கத்தாரில் உள்ள லூஸைல் மைதானத்தில் நடந்தது. உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த போட்டியில், கோப்பை யாருக்கு என்பதோடு, கோல்டன் ஷூவை யார் வெல்வார்கள் என்ற பரபரப்பும் இருந்தது. அதிலும், குறிப்பாக அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும் பிரான்ஸின் எம்பாப்வேயும் தலா 5 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தனர். அதிலும், போட்டி முடிவில் இருவரும் இதேபோல் சமநிலையில் இருக்கும் பட்சத்தில் கோல்டன் பூட் பிரான்ஸ் அணியின் எம்பாப்வேக்கு வழங்கப்படும், காரணம் அவர் தான் இருவரில் குறைந்த பெனால்டி ஷாட்டில் கோல் அடித்தவராக இருப்பார்.
அதேபோல், போட்டி முடிவில் என்பாப்வே 8 கோல்கள் அடித்து முதலிடம் பெற்று கோல்டன் பூட்டை வென்றார். கோல்டன் பூட்டை தவறவிட்டாலும் தொடர் முழுவதும் அணியை சிறப்பாக வழிநடத்தி 7 கோல்கள் அடித்தும் அசத்தி கோப்பையை வென்ற அர்ஜெண்டினாவின் கேப்டன், கால்பந்து உலகின் மிரட்டல் நாயகன் மெஸ்ஸி கோல்டன் கால்பந்தை வென்றுள்ளார்.
மேலும், சிறப்பான பங்களிப்பால் தனது அணியை வெற்றிபெறச்செய்ய கோல்களைத் தடுத்த அர்ஜெண்டினாவின் கோல் கீப்பர் மார்டினஸ்க்கு கோல்டன் கிளவ் விருது வழங்கப்பட்டது.