உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு கால்பந்து தொடர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. 


உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரானது வருகின்ற 20 ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்க இருக்கிறது. 32 நாடுகள் பங்கேற்க உள்ள இந்த கால்பந்து தொடர் 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல்முறை.  இந்த உலகக்  கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்கும் நிலையில், இவை மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. 


இந்த நிலையில், ஃபிஃபா உலகக் கோப்பைக்கான நட்சத்திரங்கள் நிறைந்த 25 பேர் கொண்ட அணியை பிரான்ஸ் அறிவித்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பையில் கரீம் பென்சிமா இடம்பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஷோபீஸ் தொடரை தவறவிட்ட கரீம் பென்ஸேமா கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கிறார். மேலும், பென்சிமா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிரான்ஸ் சர்வதேச அணியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கான பிரான்ஸ் அணி :


கோல்கீப்பர்கள் : அல்போன்ஸ் அரியோலா, ஹ்யூகோ லோரிஸ், ஸ்டீவ் மன்டாண்டா 


டிஃபென்டர்கள் : லூகாஸ் ஹெர்னார்டெஸ் , தியோ ஹெர்னாண்டஸ், பிரஸ்னல் கிம்பெம்பே , இப்ராஹிமா கோனேட் , ஜூல்ஸ் கவுண்டே, பெஞ்சமின் பவார்ட், வில்லியம் சாலிபா, தயோட் உபமென்கானோ, ரபேல் வரனே


மிட்ஃபீல்டர்கள் : எட்வர்டோ காமவிங்கா, யூசுஃப் ஃபோபானா, மேட்டியோ குவெண்டௌசி, அட்ரியன் ராபியோட், ஆரேலியன் டிச்சௌமேனி, ஜோர்டான் வெரெட்அவுட் 


ஃபார்வர்ட் வீரர்கள் :கரீம் பென்சிமா, கிங்ல்சி கோமன், உஸ்மான் டெம்பேலே, ஆலிவர் ஜிரூட், அன்டோயின் கிரீஸ்மேன், கைலியன் எம்பாப்பே, கிறிஸ்டோபர் லெகுன்கு






பிரான்சின் உலகக் கோப்பை 2022 போட்டிகள்


பிரான்ஸ் vs ஆஸ்திரேலியா - நவம்பர் 23, 12:30 AM IST


பிரான்ஸ் vs டென்மார்க் - நவம்பர் 26, 9:30 PM IST


துனிசியா vs பிரான்ஸ் - நவம்பர் 30, 8:30 PM IST


பிரான்ஸை தொடர்ந்து அமெரிக்க நாடும் உலகக் கோப்பைக்கான 26 பேர் கொண்ட அணியை அமெரிக்கா அறிவித்துள்ளது.


கோல்கீப்பர்கள்: மாட் டர்னர், சீன் ஜான்சன், ஈதன் ஹார்வத்


டிஃபெண்டர்கள்: வாக்கர் சிம்மர்மேன், ஆரோன் லாங், கேமரூன் கார்ட்டர்-விக்கர்ஸ், டிம் ரீம், செர்ஜினோ டெஸ்ட், ஷாக் மூர், அன்டோனி ராபின்சன், ஜோ ஸ்கேலி மற்றும் டி'ஆண்ட்ரே யெட்லின்.


மிட்ஃபீல்டர்கள்: கிறிஸ்டியன் ரோல்டன், கெலின் அகோஸ்டா, லூகா டி லா டோரே, யூனுஸ் டிமோரா முசா, டைலர் ஆடம்ஸ், வெஸ்டன் மெக்கென்னி, பிரெண்டன் ஆரோன்சன்


ஃபார்வர்ட் வீரர்கள்: ஜேசுஸ் ஃபெரீரா, ஜோர்டான் மோரிஸ், கிறிஸ்டியன் புலிசிக், ஜியோ ரெய்னா, ஜோஷ் சார்ஜென்ட், டிம் வீஹ், ஹாஜி ரைட்