பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு இறுதியில் கத்தாரில் பரபரப்பாக நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மெஸ்ஸி தனது கடைசி உலகக்கோப்பை தொடரிலாவது, கோப்பையை கைப்பற்றுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சிறப்பான பங்களிப்பு அளித்து கோப்பையை வென்று கொடுத்தார் மெஸ்ஸி. மைதானத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், தொலைக்காட்சி மற்றும் இணையம் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்த போட்டியை கண்டுகளித்தனர்.
இந்த போட்டிக்கு பிறகு, பிரான்ஸ் நட்சத்திர வீரரான எம்பாப்பேவுக்கு கோல்டன் பூட் விருதும், தொடர் நாயகனுக்கான கோல்டன் பால் விருது அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் கிளௌவ் விருது அர்ஜெண்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ்க்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கோல்டன் கிளௌவ் வென்ற முதல் அர்ஜெண்டினா வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்தநிலையில், கடந்த ஆண்டு கால்பந்தில் சிறப்பாக பங்காற்றிய சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் கோல் கீப்பர்கள் பெயர்கள் ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி ஃபுட்பால் அசோசியேஷன் ( ஃபிபா) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த பட்டியல் பின்வருமாறு..
சிறந்த ஃபிபா மகளிர் வீராங்கனைக்கு தேர்வானவர்கள் இறுதி பட்டியல்:
- பெத் மீட் (இங்கிலாந்து / அர்செனல் WFC)
- அலெக்ஸ் மோர்கன் (அமெரிக்கா / ஆர்லாண்டோ பிரைட் / சான் டியாகோ வேவ்)
- அலெக்ஸியா புட்டெல்லாஸ் (ஸ்பெயின் / எஃப்சி பார்சிலோனா)
சிறந்த ஃபிபா ஆடவர் வீரருக்கு தேர்வானவர்கள் இறுதி பட்டியல்:
- கரீம் பென்சிமா (பிரான்ஸ் / ரியல் மாட்ரிட் CF)
- கைலியன் எம்பாப்பே (பிரான்ஸ் / பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எஃப்சி)
- லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா / பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எஃப்சி )
சிறந்த ஃபிபா மகளிர் பயிற்சியாளருக்கான தேர்வானவர்கள் இறுதி பட்டியல்:
- சோனியா பாம்பாஸ்டர் (ஒலிம்பிக் லியோனைஸ்)
- சரினா வீக்மேன் (ஆங்கில தேசிய அணி)
- பியா சண்டேஜ் (பிரேசிலிய தேசிய அணி)
சிறந்த ஃபிபா ஆடவர் பயிற்சியாளருக்கான தேர்வானவர்கள் இறுதி பட்டியல்:
- கார்லோ அன்செலோட்டி (ரியல் மாட்ரிட் CF)
- பெப் கார்டியோலா (மான்செஸ்டர் சிட்டி எஃப்சி)
- லியோனல் ஸ்கலோனி (அர்ஜென்டினா தேசிய அணி)
சிறந்த ஃபிபா மகளிர் கோல்கீப்பருக்கு தேர்வானவர்கள் இறுதி பட்டியல்:
- ஆன்-கேட்ரின் பெர்கர் (ஜெர்மனி / செல்சியா எஃப்சி பெண்கள்)
- மேரி ஏர்ப்ஸ் (இங்கிலாந்து / மான்செஸ்டர் யுனைடெட் WFC)
- கிறிஸ்டியன் எண்ட்லர் (சிலி / ஒலிம்பிக் லியோனைஸ்)
சிறந்த ஃபிபா ஆடவர் கோல்கீப்பருக்கு தேர்வானவர்கள் இறுதி பட்டியல்:
- யாசின் பவுனோ (மொராக்கோ / செவில்லா எஃப்சி)
- திபாட் கோர்டோயிஸ் (பெல்ஜியம் / ரியல் மாட்ரிட் CF)
- எமிலியானோ மார்டினெஸ் (அர்ஜென்டினா / ஆஸ்டன் வில்லா எஃப்சி)
கடந்த ஆண்டு மிகவும் அழகாக/நேர்த்தியாக கோல் அடித்தவர்களுக்கான இறுதி பட்டியல்:
- மார்சின் ஓலெக்ஸி (போலந்து): வார்தா போஸ்னான் vs ஸ்டால் ரெஸ்சோவ் [PZU ஆம்ப் கால்பந்து எக்ஸ்ட்ராக்ளாசா] (6 நவம்பர் 2022)
- டிமிட்ரி பேயட் (பிரான்ஸ்): ஒலிம்பிக் டி மார்செய் PAOK தெசலோனிக்கி [UEFA யூரோபா கான்பரன்ஸ் லீக்] (7 ஏப்ரல் 2022)
- ரிச்சர்லிசன் (பிரேசில்): பிரேசில் v. செர்பியா [FIFA உலகக் கோப்பை கத்தார் 2022] (24 நவம்பர் 2022)