மேலும் அறிய

IND vs PAK: இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான்.. டிவியை அடித்து உடைத்த ரசிகர்!

பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிடம் தோற்ற நிலையில் அந்நாட்டு ரசிகர்கள் நொந்து போயுள்ளனர்.

டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோற்ற நிலையில், அந்த அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியா vs பாகிஸ்தான்

டி20 உலகக்கோப்பை போட்டியில் கொழும்புவில் நடைபெற்ற ஆட்டத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 77 ரன்களும், தொடர்ந்து திலக் வர்மா 25, சூர்யகுமார் யாதவ் 32, சிவம் துபே 27 ரன்களும் எடுக்க 20 ஓவர்களில் 7 விக்கெட்  இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

டிவியை உடைத்த ரசிகர்

இதனிடையே இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்ற நிலையில், அந்நாட்டு ரசிகர்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வகையில் போட்டி முடிந்த சிறிது நேரத்தில் பாகிஸ்தானிய ரசிகர் ஒருவர் தனது வீட்டில் இருந்த டிவியை அடித்து உடைக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளது. அதில் டி20 உலகக்கோப்பையில் இந்தியா மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தியது. நான் விரக்தியில் என் வீட்டு டிவியை உடைத்தேன் என சொல்லும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. 

இன்னொரு ரசிகர், “முற்றிலும் உடைந்து, வெட்கப்பட்டு இருக்கிறேன். பாகிஸ்தான் தோற்ற அதிர்ச்சியில் என்னால் பேசக்கூட முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

இதேபோல், கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் போட்டியை நேரடியாக பார்த்த பாகிஸ்தான் ரசிகர் மக்பூல் ஊடகத்தினரிடம் பேசும்போது, “இப்போதெல்லாம் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோற்பது ஒரு வழக்கமான விஷயமாகிவிட்டது என்று நினைக்கிறேன். குறைந்தப்பட்சம் போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் எங்களிடம் பும்ரா, ஹர்திக் பாண்ட்யாவை போன்றவர்களை எதிர்கொள்ள முடியாத சூழல் உள்ளது.இப்படியே இருந்தால் நாம் என்றைக்கும் இந்தியாவை வெல்ல முடியாது. அவர்கள் செய்யும் முன்னேற்பாடுகள் மிக சிறப்பாக உள்ளது. இன்றைய போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது பார்த்து என் இதயம் உடைந்து விட்டது. இது மிகவும் மோசமான செயல்திறன்” என தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
மதுரையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமி.. ஆஹா மீண்டும் புதிதாய் கிடைத்த பொக்கிஷம் !
மதுரையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமி.. ஆஹா மீண்டும் புதிதாய் கிடைத்த பொக்கிஷம் !
IND vs NZ Head to Head: நேருக்கு நேர் மோதலில் இந்தியா 'கெத்து'.. உலகக்கோப்பையில் நியூசிலாந்து 'மாஸ்'.. அகமதாபாத்தில் கோப்பை யாருக்கு?
IND vs NZ Head to Head: நேருக்கு நேர் மோதலில் இந்தியா 'கெத்து'.. உலகக்கோப்பையில் நியூசிலாந்து 'மாஸ்'.. அகமதாபாத்தில் கோப்பை யாருக்கு?
IND vs NZ T20 WC Final: ”Warden-னா அடிப்போம்..” இந்தியாவை கதறவிடும் கருப்பு தொப்பிகள்.. உலகக் கோப்பையில் வெற்றியே கிடையாதாம்
IND vs NZ T20 WC Final: ”Warden-னா அடிப்போம்..” இந்தியாவை கதறவிடும் கருப்பு தொப்பிகள்.. உலகக் கோப்பையில் வெற்றியே கிடையாதாம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
New Train In Tamilnadu : பொள்ளாச்சி, நெல்லை, காரைக்குடி மக்களுக்கு குஷி.! தமிழகத்தில் புதிதாக 4 ரயில் அறிவிப்பு- எங்கெல்லாம் தெரியுமா.?
பொள்ளாச்சி, நெல்லை, காரைக்குடி மக்களுக்கு குஷி.! தமிழகத்தில் புதிதாக 4 ரயில் அறிவிப்பு- எங்கெல்லாம் தெரியுமா.?
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
Embed widget