உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்ற பிறகு, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக அந்த நாட்டிலே கடந்த ஜூன் மாதம் முதல் தங்கியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் முதல் அங்கு தங்கியுள்ள இந்திய அணி இங்கிலாந்துடனான தொடரில் பங்கேற்பதற்காக அங்கேயே தங்கியுள்ளனர்,


வரும் ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்க உள்ள இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய அணியினர் அந்த நாட்டு கவுண்டி அணியினருடன் போட்டித்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தநிலையில், இந்திய அணியினருடன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணியினர் நேற்று அறிவிக்கப்பட்டனர்.




இந்த போட்டித்தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தொடரில் அறிமுகமாகி அசத்தி, சர்ச்சைக்குரிய டுவிட்டால் அணியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் மட்டுமின்றி, அந்த அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் கரண், மார்க் உட் மற்றும் பென் ஸ்டோக்சும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.


மேலும், ஓய்வில் இருந்த ஜோஸ் பட்லர், ஜானி பார்ஸ்டோ ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கும் வகையில் ஹசீப் ஹமீது, ஒலே போப், டான் லாரன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். சுழற்பந்துவீச்சாளராக டாம் பெஸ், ஜேக்லீச் ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.






கேப்டன் ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பார்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்னஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராலோ, சாம் கரண், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், ஜேக்லீச், ஒலே போப், ஒல்லி ராபின்சன், டாம் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ். மார்க் உட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.




விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, ஹனுமா விகாரி, ரிஷப்பண்ட், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், அஸ்வின், சமி, சிராஜ் ஆகியோர் அடங்கிய வலுவான இந்திய அணிக்கு எதிராக மிகவும் வலுவான அணியாகவே இங்கிலாந்து அணியினரை அந்த நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.


ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ள இந்தத்தொடர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது என்பதால், இந்த தொடரில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையுடன் நாடு திரும்பும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.