விழுப்புரம் : விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். நவீன சிந்தட்டிக் மைதானம் அமைத்து தரவேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Continues below advertisement

49வது ஜூனியர் தடகள போட்டி

விழுப்புரத்தில் 49வது ஜூனியர் தடகள போட்டி இன்று நடைபெற்றது. போட்டியினை விழுப்புரம் மாவட்ட தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக் துவக்கி வைத்தார். மாவட்ட அளவிலான நடைபெற்ற தடகள போட்டியில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த 20 வயதிற்குட்பட்டோர் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 100 மீட்டர் ஓட்டபந்தம், 200 மீட்டர் ஓட்டபந்தயம், ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய 104 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம், ரொக்கபரிசு ஆகியவை வழங்கப்பட்டன.

வெற்றி பெற்றவர்களு பரிசு 

 வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பரிசு தொகை தொகை வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைக்கு வழங்கப்பட்டது. இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் 100 மாணவர்கள், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

சிந்தட்டிக் மைதானம் அமைத்து தர கோரிக்கை

விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழை நேரங்களில் மாணவர்கள் விளையாட்டு போட்டிகள் நடத்தவோ, பயிற்சி பெறவோ முடியாத நிலையில் இருப்பதால் சிந்தட்டிக் மைதானம் அமைத்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

தடகள போட்டி என்றால் என்ன?

தடகள போட்டி என்பது தடகள விளையாட்டுகளில் பங்கேற்பு, நிகழ்வுகள், கட்டமைப்பு மற்றும் வாய்ப்புகளை விரிவாக்கும் செயல்களைக் குறிக்கிறது. இதால் தடகள போட்டிகளின் வகைகள், இதில் பங்கேற்கும் வீரர்கள், குழுக்கள், போட்டி கட்டமைப்புகள், புதிய நிகழ்வுகள், மாநில-தேசிய மட்டங்களில் ஏற்படும் பரவல், மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுகிறது.

சிந்தடிக் மைதானத்தின் பயன்பாடுகள்:

சிந்தடிக் மைதானம் தடகள, கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, மற்றும் பல தடகள விளையாட்டுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவை அதிக பயிற்சி மற்றும் போட்டித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நீடித்த மற்றும் பாதுகாப்பான மேற்பரப்பை வழங்குகின்றன. மேலும், இயற்கை புல்வளத்தைப் போன்ற பராமரிப்பு தேவைகள் குறைவாக உள்ளதால், விளையாட்டு மைதானங்களாகவும், மதிப்பளிக்கப்படும் பொழுதுபோக்கு மையங்களாகவும் இவை பயன்படுகின்றன.

சிந்தடிக் மைதானங்கள் தடகள ஓடுதளமாகவும், பல்வேறு போட்டி மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளுக்கான இடமாகவும் முக்கியமாக செயல்படுகின்றன. இவை அதிக வெப்பம் மற்றும் காலநிலை மாற்றங்களைத் தாங்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன