இந்திய கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்து வீச்சு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருபவர், தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 ஆகிய போட்டித் தொடர்களில் சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் கப்பா டெஸ்டில் இந்தியா வெற்றிபெறுவதற்கு நடராஜன் வீழ்த்திய விக்கெட்டுகளும் முக்கிய காரணம்.
இவரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டும் விதமாக, இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா புதிய ரக தார் எஸ்.யூ.வி. மாடல் காரை பரிசாக வழங்கவுள்ளதாக ஏற்கனவே டுவிட்டரில் கூறியிருந்தார். இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தான் கூறியதுபோல நேற்று நடராஜனுக்கு புதிய மஹிந்திரா காரை பரிசாக வழங்கியுள்ளார்.

Playing cricket for India is the biggest privilege of my life. My #Rise has been on an unusual path. Along the way, the love and affection, I have received has overwhelmed me. The support and encouragement from wonderful people, helps me find ways to #ExploreTheImpossible ..1/2 pic.twitter.com/FvuPKljjtu
— Natarajan (@Natarajan_91) April 1, 2021

புதிய காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நடராஜன் பகிர்ந்துள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், எனது இந்த உயர்வு அசாதாரண பாதையில் வந்துள்ளது. இந்த பாதையில் நான் பெற்ற அன்பும், பாசமும் என்னை மூழ்கடித்துவிட்டது. அற்புதமான மனிதர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆதரவு, சாத்தியமற்றதையும் செய்து முடிப்பதற்கான வழிகளை கண்டறிய உதவியது என்று பதிவிட்டுள்ளார்.

As I drive the beautiful @Mahindra_Thar home today, I feel immense gratitude towards Shri @anandmahindra for recognising my journey & for his appreciation. I trust sir, that given your love for cricket, you will find this signed shirt of mine from the #Gabba Test, meaningful 2/2
— Natarajan (@Natarajan_91) April 1, 2021

மேலும், நான் இன்று அழகான மஹிந்திரா காரை ஓட்டும்போது, ஆனந்த் மஹிந்திரா எனது பயணத்தை அங்கீகரித்தற்காகவும், அவரது பாராட்டிற்காகவும் நன்றியை தெரிவிக்கிறேன். நீங்கள் என்னுடைய கையொப்பமிட்ட கப்பா டெஸ்ட் டிஷர்ட்டை பெறும்போது, நீங்கள் கிரிக்கெட் மேல் கொண்ட அன்பை அர்த்தமுள்ளதாக்கும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஆனந்த் மகிந்திர நடராஜன் தவிர சுப்மன் கில், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் மஹிந்திரா காரை பரிசாக அளிப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.