பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான மந்தனாவும், ஷோஃபி டிவைன் களமிறங்கினர். டெல்லி அணி சார்பில் முதல் ஓவரை கடந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய மரிசான் கேப் வீச அந்த ஓவரை எதிர் கொண்ட மந்தனா ஒரு ரன் கூட எடுக்கவில்லை. தொடர்ந்து தடுமாறி வந்த மந்தனா, நான்காவது ஓவரை வீச வந்த ஷிகா பாண்டேவின் பந்துவீச்சில், கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆறாவது ஓவர் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழந்து 29 ரன்கள் சேர்த்து இருந்தது.
அதன் பின்னர், தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய டெல்லி அணியை பெங்களூரு அணியால் சமாளிக்க முடியாமல் தடுமாறி வந்தனர். நிதானமாக ஆடிவந்த டிவைன் 8வது ஓவரின் கடைசி பந்தில் க்ளீன் போல்ட் ஆக, ஆர்.சி.பி அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்து இருந்தது.
அதன் பின்னர், நிதானமாக ஆடி வந்த பெரியுடன் கைகோர்த்த நைட் வந்ததும் நடையைக் கட்ட, ரிச்சா கோஷ் களத்துக்கு வந்தார். தொடக்கத்தில் தடுமாறிய அவர் டெல்லி அணி வீசிய லூஸ் பந்துகளை பவுண்டரிகளாக மாற்றினார். அதேபோல், 15 ஓவர்களுக்குப் பிறகு இருவரும் அடித்து அடினர். 17வது ஓவரில் தான் 100 ரன்களைக் கடந்தனர். 17வது ஓவரை வீசிய நாரிஸின் பந்தில் இரண்டு சிக்ஸர் பறக்க விட்டு தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார்.
அதன் பின்னர் இருவரும் இணைந்து சிக்ஸரையும் பவுண்டரியும் தொடர்ந்து விளாசி வந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 34 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்த நிலையில், ரிச்சா கோஷ் தனது விக்கெட்டை 18.2 வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.