World Cup 2023 Promo: உலகக்கோப்பை கிரிக்கெட்  தொடர் என்பது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்படுகிறது. இந்த தொடர் ஐசிசியுடன் ஒரு நாடு தனியாகவோ அல்லது இரண்டு  மூன்று நாடுகள் இணைந்தோ கூட நடத்தும். இம்முறை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகளமாக தொடங்கவுள்ள உல்கக்கோப்பைத் தொடருக்கு 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகளும் தயாராகிக்கொண்டு உள்ளன.


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்கிய காலத்தில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டும் வரை உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இரண்டு முறை கோப்பையைக் கைப்பற்றி மிகவும் வலுவான அணியாக எப்போதும் இருக்கும் மேற்கு இந்திய தீவுகள் அணி இந்த முறை உலகக்கோப்பைச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 




இம்முறை களமிறங்கும் 10 அணிகள்


தொடரை நடத்தும் இந்தியா, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, இதைத்தொடர்ந்து முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் கோப்பையை இந்த முறையாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கும் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் இம்முறை கோப்பையை வென்றுள்ளது. 




கோப்பைக்காக மோதல்:


இந்த 10 அணிகளில் 5 அணிகள் ஏற்கனவே கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அதேபோல் கோப்பையை வெல்ல அனைத்து தகுதிகளும் இருந்து இன்னும் உலகக்கோப்பையை தங்களுக்கு சொந்தமாக்காமல் உள்ள அணிகள் என்றால் அது நியூசிலாந்தும் தென் ஆப்ரிக்காவும்தான். இந்த இரு அணிகளும் ஒவ்வொரு உலகக்கோப்பைக்கும் தலை சிறந்த வீரர்களை கொண்டு களமிறங்கினாலும் கோப்பை இதுவரை வசப்படாமல் உள்ளது. இதற்கு இந்த இரு அணிகளும் ராசி இல்லாத அணிகள் என்ற பூமர் பேச்சுகளும் கிரிக்கெட் உலகில் அடிபட்டுக்கொண்டுதான் உள்ளது.






இந்த தொடருக்காக இந்தியா உள்ளிட்ட சில அணிகள் ஏற்கனவே 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. உலகக்கோப்பைத் தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி உட்பட இம்முறை களமிறங்கவுள்ள 10 நாடுகளின் கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐசிசி நாள்தோறும் ஏதேனும் ஒரு அறிவிப்பை விட்டுக்கொண்டே உள்ளனர். இந்நிலையில் இவர்களோடு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பில் தற்போது உலகக்கோப்பைக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர்கள் மிகவும் ஆக்ரோசமாக விளையாடிய காட்சிகள் தொடங்கி மிகவும் அற்புதமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.