Women's T20 World Cup 2023 Warm Up Match Schedule: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் டி20ஐ முத்தரப்பு தொடருக்கு பிறகு, இந்திய மகளிர் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரானது வருகின்ற பிப்ரவரி 10ம் தேதி முதல் அதிகாரபூர்வமாக தொடங்கிறது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023:
மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 பிப்ரவரி 10 முதல் தொடங்குகிறது. தகுதிபெற்ற 10 அணிகளும் தயாராக உள்ள நிலையில், மொத்தம் 23 போட்டிகளானது 27 நாட்கள் நடைபெற இருக்கிறது. அனைத்து அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மகளிர் T20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும். அதன் பிறகு நான்கு அணிகள் பிளேஆஃப்களில் மோதும்.
மகளிர் டி20 உலகக் கோப்பையின் 8வது சீசன் இதுவாக்கும். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இம்முறையும் பட்டத்தை வெல்ல காத்திருக்கிறது. இதுவரை மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 5 முறையும், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு முறையும் பட்டத்தை வென்றுள்ளன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய அணி முதல்முறையாக இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கின்றனர்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பிரிவுகள்:
குழு 1
- ஆஸ்திரேலியா
- வங்கதேசம்
- நியூசிலாந்து
- தென்னாப்பிரிக்கா
- இலங்கை
குழு 2
- இங்கிலாந்து
- இந்தியா
- பாகிஸ்தான்
- அயர்லாந்து
- மேற்கிந்திய தீவுகள்
இந்த தொடருக்கு முன்னதாக மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் தகுதிபெற்ற 10 அணிகளும் தலா 2 பயிற்சி போட்டிகளில் நாளை மற்றும் பிப்ரவரி 8ம் தேதி விளையாட இருக்கின்றன. இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதனை தொடர்ந்து, வருகின்ற 8ம் தேதி வங்கதேசத்தை இந்திய அணி தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை வார்ம்-அப் போட்டிகள்:
பிப்ரவரி 6, 2023 (திங்கட்கிழமை)
- நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் (பிற்பகல் 1:30)
- இலங்கை vs அயர்லாந்து (பிற்பகல் 1:30)
- தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து (மாலை 6:00 மணி)
- ஆஸ்திரேலியா vs இந்தியா (மாலை 6:00 மணி)
- பாகிஸ்தான் vs பங்களாதேஷ் (மாலை 6:00 மணி)
பிப்ரவரி 8, 2023 (புதன்கிழமை)
- அயர்லாந்து vs ஆஸ்திரேலியா (பிற்பகல் 1:30)
- இங்கிலாந்து vs நியூசிலாந்து (பிற்பகல் 1:30)
- பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா (மாலை 6:00 மணி)
- வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா (மாலை 6:00 மணி)
- பங்களாதேஷ் vs இந்தியா (மாலை 6:00 மணி)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் மகளிர் டி20 உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியை நேரடியாக ஒளிபரப்பக்கூடிய தளத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்னும் உறுதிப்படுத்தவில்லை.