மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 பிப்ரவரி 10 முதல் தொடங்குகிறது. தகுதிபெற்ற 10 அணிகளும் தயாராக உள்ள  நிலையில், மொத்தம் 23 போட்டிகள் கொண்ட தொடரானது 27 நாட்கள் நடைபெற இருக்கிறது. தகுதிபெற்ற 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மகளிர் T20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறும். அதன் பிறகு நான்கு அணிகள் பிளேஆஃப்களில் மோத இருக்கின்றன. 

மகளிர் டி20 உலகக் கோப்பையின் 8வது சீசன் இதுவாகும். இதுவரை மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 5 முறையும், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு முறையும் பட்டத்தை வென்றுள்ளன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இம்முறையும் பட்டத்தை வெல்ல காத்திருக்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய அணி முதல்முறையாக இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கின்றனர்.  வருகின்ற 12ம் தேதி இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்தநிலையில், மகளிர் டி20 போட்டிகளில் டாப் 10 தனிநபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் பட்டியலை இங்கே காணலாம். 

தற்போது பஹ்ரைன் அணிக்காக விளையாடி வரும் இலங்கையில் முன்னாள் வீராங்கனையான தீபிகா ரசாங்கிகா , மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக தனிநபர் ஸ்கோரை அடித்த சாதனையை படைத்துள்ளார். மகளிர் டி20 சர்வதேச போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 150 ரன்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. 

அதேபோல், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி, 2019ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 148 நாட் அவுட்டுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 

இதுவரை 5 முறை மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி வீரர்கள்தான் இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

மகளிர் கிரிக்கெட்டில் அதிக தனிநபர் டி20 ஸ்கோர்:

1 தீபிகா ரசாங்கிகா 161* பஹ்ரைன் சவூதி அரேபியா மார்ச் 2022
2 ஈஷா ஓசா 158* ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பஹ்ரைன் மார்ச் 2022
3 அலிசா ஹீலி 148* ஆஸ்திரேலியா இலங்கை அக்டோபர் 2019
4 மெக் லானிங் 133* ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஜூலை 2019
5 பாத்துமா கிபாசு 127* தான்சானியா ஸ்வாட்டில் செப்டம்பர் 2021
6 நட்சத்திரங்கள் காலிஸ் 126* நெதர்லாந்து ஜெர்மனி ஜூலை 2019
7 மெக் லானிங் 126 ஆஸ்திரேலியா அயர்லாந்து மார்ச் 2014
8 சுசி பேட்ஸ் 124* நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா ஜூன் 2018
9 டேனி வியாட் 124 இங்கிலாந்து இந்தியா மார்ச் 2018
10 பெத் மூனி 117* ஆஸ்திரேலியா இங்கிலாந்து நவம்பர் 2017

அதிகபட்சமாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த 4 வீராங்கனைகள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில், ஒரு இந்திய வீராங்கனைகள் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தீபிகா ரசாங்கிகா:

2021-22 ஆம் ஆண்டு ஓமனில் நடைபெற்ற ஜிசிசி மகளிர் டுவென்டி 20 சாம்பியன்ஷிப் கோப்பையில் சவுதி அரேபியாவுக்கு எதிராக பஹ்ரைனுக்காக களமிறங்கிய தீபிகா ரசாங்கிகா 66 பந்துகளில் 31 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 161 ரன்கள் குவித்தார். இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தீபிகா, அந்த போட்டியில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கைவில்லை. அந்த போட்டியில் பஹ்ரைன் அணி 20 ஓவர்களில் 318/1 ரன்களை எடுக்க உதவியது. மகளிர் கிரிக்கெட்டில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அடுத்து களமிறங்கிய சவுதி அரேபியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 49 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை தழுவியது.