மேலும் அறிய

Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி

Mukul Choudhary IPL 2026: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக அரைசதம் விளாசி, லக்னோவின் வெற்றிக்கு வழிவகுத்த முகுல் சவுத்ரி யார்? என்ற கேள்வி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

Mukul Choudhary IPL 2026: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக அரைசதம் விளாசி, லக்னோவின் வெற்றிக்கு வழிவகுத்த முகுல் சவுத்ரிக்கு வயது வெறும் 21 மட்டுமே.

கவனத்தை ஈர்த்த முகுல் சவுத்ரி..

ஐபிஎல் தொடர் இளம் வீரர்கள் மற்றும் திறமைகளை அடையாளம் காண உதவுகிறது என்பதை ஒவ்வொரு சீசனும் உணர்த்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் கண்டறியப்பட்ட முதல் நட்சத்திரமாக முகுல் சவுத்ரி உருவெடுத்துள்ளார். நேற்றைய லீக் சுற்று போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியில் ஆயுஷ் பதோனியின் அதிரடி ஆட்டத்தால் 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை சேர்த்து இருந்தது. நான்கு ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இதன் பிறகு அதிரடி பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை என்பதால் கொல்கத்தாவின் வெற்றி உறுதியாகிவிட்டது என கூறப்பட்டது. இதனால் நடப்பு தொடரில் முதல் வெற்றி வசமாகிறது என்ற கேப்டன் ரகானே கொண்டிருந்த கனவை, 21 வயது சிறுவனான முகுல் சவுத்ரி அடித்து நொறுக்கியுள்ளார்.

அடிச்சா சிக்சர் தான்.. ஈடன் கார்டனில் ரன் மழை..

லக்னோவின் வெற்றிக்கு 24 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டபோது, 6 பந்துகளுக்கு இரண்டு ரன்களை மட்டுமே எடுத்திருந்த முகுல் சவுத்ரி,என்ன செய்துவிடுவார் என்பதே பலரின் நினைப்பாக இருந்து இருக்கும். ஆனால், அவர் எதிர்கொண்ட அடுத்த 19 பந்துகளில் 7 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார். ஸ்டம்புகளுக்கு நேராக போட்டால் அடிக்கிறார் என்பதற்காக ஆஃப் சைடில் போட கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால், அதையும் மடக்கி போட்டு அடித்து நாலாபுறமும் சிக்சர்களாக பறக்கவிட்டார். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டபோது 2 சிக்சர்களை விளாசி, ஆட்டத்தின் கடைசி பந்தில் லக்னோ அணிக்கு த்ரில் வெற்றியை பெற்று தந்து ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தினார்.

”தோனியை பார்த்து வளர்ந்தேன்..”

லக்னோ அணியின் வெற்றிக்கு வித்திட்ட முகுல் சவுத்ரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பாக பேசுகையில், “இந்த அரைசத்தை எம்.எஸ். தோனிக்கும். தோனி எப்படி போட்டியை முடிக்கிறார் என நான் உற்று கவனிப்பேன். பேட்டிங் ஆர்டரில் அவர் களமிறங்கும் அந்தே இடத்தில் தான் நானும் களமிறங்குகிறேன். எனது தொடக்க காலத்தில் தோனி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இன்று போட்டியை நான் முடித்துவைத்துள்ளேன். அதை தோனிக்கு சமர்பிக்கிறேன்” என முகுல் சவுத்ரி பேசியுள்ளார்.

யார் இந்த முகுல் சவுத்ரி?

தனது மகனை கிரிக்கெட் வீரராக மாற்ற வேண்டுமென திருமணத்திற்கு முன்பே தந்தை முடிவு செய்துவிட்டதாக, முகுல் சவுத்ரி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவரது குடும்பம் நிதி நெருக்கடி மற்றும் உள்ளூரில் கல்விக்கான போதிய உட்கட்டமைப்புகள் இல்லாததால் 13-14வது வயதில் ஜெய்பூரில் குடியேறியுள்ளது. போட்டி திறனை வளர்ப்பதற்காக கடுமையாக உழைத்த முகுல், டி20 போட்டிகளுக்காக தன்னை மெருகேற்றிக்கொள்ள குருகிராமிற்கு சென்று பல போட்டிகளில் விளையாட தொடங்கியுள்ளார். உத்தரபிரதேச அணிக்கு எதிரான ஒரு போட்டியில் தனது பேட்டிங்கை கண்ட பிறகே, எனது தந்தைக்கு என் மீது நம்பிக்கை வந்தது எனவும் முகுல் பேசியுள்ளார். இரவு நேரத்தில் தான் விளையாடிய இரண்டாவது போட்டியிலேயே லக்னோ அணியின் வெற்றி நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். 

உள்ளூர் போட்டிகளில் எப்படி?

2025/26 சையது முஸ்டக் அலி தொடரில் அடையாளம் காணப்பட்ட நட்சத்திரங்களில் முகுல் சவுத்ரியும் ஒருவராவார். அந்த தொடரில் 57+ சராசரி மற்றும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 173 ரன்களை குவித்து இருந்தார். அதற்கு முன்னதாக உள்ளூரில் நடந்த தகுதிச் சுற்று போட்டிகளில் அதிரடியாக விளையாடி சதங்களை குவித்து 600க்கும் அதிகமான ரன்களை சேர்த்து கவனத்தை ஈர்த்தார். இதன் விளைவாகவே ஐபிஎல் ஏலத்தின் போது மும்பையுடன் கடுமையாக போட்டியிட்டு, 2 கோடியே 60 லட்சத்துக்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Jamie Overton Injury: பிளே ஆஃப் கனவு தானா? காயத்தால் வெளியேறிய ஜேமி ஓவர்டன்... சிஎஸ்கே-வின் அடுத்த பிளான் என்ன?
Jamie Overton Injury: பிளே ஆஃப் கனவு தானா? காயத்தால் வெளியேறிய ஜேமி ஓவர்டன்... சிஎஸ்கே-வின் அடுத்த பிளான் என்ன?
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவிற்கு குட் பை சொல்லப்போகும் மும்பை இந்தியன்ஸ்?
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவிற்கு குட் பை சொல்லப்போகும் மும்பை இந்தியன்ஸ்?
"MI-ஐ அன்பாலோ செய்தாரா ஹர்திக்? பிளே-ஆஃப் கனவு கலைந்த நிலையில் வைரலாகும் தகவல்கள்.. நடந்தது என்ன?
CSK Ipl Match : சென்னையில் மிரட்டும் மழை.! சிஎஸ்கே போட்டி நடக்குமா.? தமிழ்நாடு வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னையில் மிரட்டும் மழை.! சிஎஸ்கே போட்டி நடக்குமா.? தமிழ்நாடு வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Modi: “இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
“இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
Aadhav Arjuna: போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
US Iran War: ''ஹார்முஸ் ஜலசந்திய திறந்தாலும், இப்போதைக்கு பிரச்னை தீராது.!'' எச்சரிக்கும் சிங்கப்பூர் பிரதமர்
''ஹார்முஸ் ஜலசந்திய திறந்தாலும், இப்போதைக்கு பிரச்னை தீராது.!'' எச்சரிக்கும் சிங்கப்பூர் பிரதமர்
Dharmarajan IPS : ’முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன் IPS..?
’முதல்வர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன்..?
Work From Home: அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
Hyundai Cheapest EV: டாடா, மஹிந்திரா எல்லாம் காலி.! மிகக் குறைந்த விலை EV SUV-ஐ இறக்கும் ஹூண்டாய்; அம்சங்கள் என்ன.?
டாடா, மஹிந்திரா எல்லாம் காலி.! மிகக் குறைந்த விலை EV SUV-ஐ இறக்கும் ஹூண்டாய்; அம்சங்கள் என்ன.?
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
Embed widget