ஆம், ஐசிசி அறிவிப்பின்படி போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால், வானிலை காரணமாக முழுமையாக நடைபெறுமா என்பது உறுதியாக தெரியவில்லை.
IND Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டி கோவிந்தா? அடித்து வெளுக்க தயாராகும் மழை - வானிலை எச்சரிக்கை
IND Vs Pak Colombo Weather Report: ஐசிடி டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ள நாளைய லீக் போட்டியின்போது, கொழும்புவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது.

IND Vs Pak Colombo Weather Report: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற உள்ள, கொழும்பு பகுதிக்கான வானிலை அறிக்கை விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தொடரும் சிக்கல்:
பல்வேறு விதமான சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களை கடந்த பிறகு, டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, நாளை (பிப்.15) திட்டமிட்டபடி நடைபெறும் என ஐசிசி அறிவித்தது. ஆனால், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டால், அந்த போட்டி முழுமையாக நடைபெறுவதை இன்னும் உறுதியாக கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறை அரசியல் தலையீடாக இல்லாமல், போட்டி நடைபெற உள்ள கொழும்பு மைதானம் பகுதியில் நிலவும் வானிலை பிரச்னையாக மாறியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறும்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகப்படியாக உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இடி, மின்னலுடன் கனமழை பொழிய வாய்ப்பு:
வானிலை மைய அறிக்கையின்படி, நாளை பகல் நேரங்களில் கொழும்பு பகுதியில் பழை பொழிய 65 சதவிகிதம் வாய்ப்புள்ளது. பிற்பகல் முழுவதும் பலத்த இடியுடன் கருமேகங்கள் சூழ்ந்திருக்க அதிக வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் மழை பொழிவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேநேரம், சில உள்ளூர் தனியார் வானிலை ஆய்வாளர்கள் மாலை நேரத்திலும் குறிப்பாக போட்டியின் ஆரம்ப நேரத்தில் மழை பொழிய 49 முதல் 65 சதவிகிதம் மழை பொழிய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக போட்டி நடைபெறும் நேரத்தில் கொழும்புவில், ஈரப்பதமான சூழல் நிலவும் எனவும், மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கணித்துள்ளனர்.
எப்போது போட்டி கைவிடப்படும்?
குறைந்தபட்சம் இரு அணிகளும் தலா 5 ஓவர்கள் விளையாடும் அளவிற்கு டி20 போட்டிக்கு நேரம் இருக்க வேண்டும். அந்த விதியை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானால், போட்டி கைவிடப்படும். இத்தகைய சூழலில், லீக் சுற்று போட்டிகளுக்கு ரிசர்வ் டே ஆப்ஷன் இல்லாததால், போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும்.
வங்கதேசம் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா உடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் அமைப்பிற்கும் மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் ஐசிசி குழு ஒன்று பாகிஸ்தானிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பிறகு போட்டியில் பங்கேற்பதாக பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டது. இந்த சூழலில் தான், போட்டிக்கு இயற்கையால் இடையூறு ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கோடிகளில் இழப்பு ஏற்படும் அபாயம்:
இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி ரத்தானால், ஒளிபரப்பாளரான ஜியோஸ்டார் தான் முதலில் பெரிய இழப்பை எதிர்கொள்ள நேரிடும். போட்டியின் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவதால், ஒளிபரப்பாளரின் விளம்பர வருவாய் மிகவும் பாதிக்கப்படும். முழுமையாக ஆட்டம் நிறுத்தப்பட்டால், டிக்கெட் கட்டணத்தை ரசிகர்களிடம் திருப்பித் தர வேண்டியிருக்கும் என்பதால், இலங்கை கிரிக்கெட்டின் (SLC) வருவாய் கடுமையாக பாதிக்கப்படும். ஒட்டுமொத்தமாக, இந்தியா vs பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டால், அஅது பங்குதாரர்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும். உள்ளூர் நேரப்படி, நாளை இரவு 7 மணிக்கு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி திட்டமிடப்பட்டுள்ளது.
Frequently Asked Questions
இந்தியா - பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் நடைபெறுமா?
கொழும்புவில் வானிலை எப்படி இருக்கும்?
போட்டி நடைபெறும் நாளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். பகல் நேரங்களில் 65% மழை பெய்ய வாய்ப்புள்ளது, மேலும் இடியுடன் கூடிய மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி ரத்தானால் என்ன ஆகும்?
குறைந்தபட்சம் இரு அணிகளும் தலா 5 ஓவர்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் போட்டி கைவிடப்படும். லீக் சுற்றில் ரிசர்வ் டே இல்லாததால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்தானால் யாருக்கு இழப்பு ஏற்படும்?
ஒளிபரப்பாளர் ஜியோஸ்டார், இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் பங்குதாரர்கள் மிகப்பெரிய நிதி இழப்பை எதிர்கொள்வார்கள். விளம்பர வருவாய் மற்றும் டிக்கெட் வருவாய் பாதிக்கப்படும்.





















