மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுகள் ட்விட்டரிகள் ஆக்டீவாகவே இயங்கி வருகிறார். சர்வதேச மற்றும் உள்ளூரு கிரிக்கெட் தொடர்களை பார்த்து கவனித்து வரும் அவர், அவ்வப்போது கிரிக்கெட் பற்றிய கமெண்ட்ஸ்களை பதிவிடுவார். இந்நிலையில், சச்சினை கவர்ந்த கிரிக்கெட் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
சச்சின் பகிர்ந்திருக்கும் வீடியோவில், சிறுமி ஒருவர் பேட்டிங் செய்ய ஸ்ட்ரைக்கிங் எண்டில் நிற்கிறார். அவர் பின்னால் நிற்கும் நாய் குட்டி ஒன்று விக்கெட் கீப்பிங் செய்கிறது. பந்தை பேட்டர் அடித்தவுடன் ஓடி சென்று பந்தை பிடிக்கவும் செய்கிறது அந்த நாய் குட்டி. இது குறித்து சச்சின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “நண்பர் ஒருவர் பகிர்ந்த வீடியோ இது. கவனமாக பந்து பிடிக்கும் திறமை இது. விக்கெட் கீப்பர்களை, ஃபீல்டர்களை, ஆல்-ரவுண்டர்களை பார்த்திருப்போம். இதை என்னவென்று சொல்ல?” என கமெண்ட் செய்திருக்கிறார் சச்சின்.
இது போன்ற மற்ற செய்திகளைப் படிக்க:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்