IND vs NZ  2nd T20; இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 12 மணிக்கு பே ஓவல் மைதானத்தில் தொடங்கியது.


இப்போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக சதம் விளாசியுள்ளார்.  இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 191 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் சார்பில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் விளாசியுள்ளார். அவர் மொத்தம் 11 ஃபோர், 7 சிக்ஸர் என அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இந்த சதம் சர்வதேச டி20 போட்டியில் சூர்யகுமார் யாதாவின் இரண்டாவது சதமாகும். 






முதல் இன்னிங்ஸ் முடிந்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், "டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசுவது என்பது எப்போதும் ஸ்பெஷல்தான். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாட வேண்டும் என்பது எனக்கு முக்கியமானதாக இருந்தது. கேப்டன் ஹார்திக் பாண்டியா என்னிடம் 18 அல்லது 19ஆவது ஓவர் வரை நிதானமாக விளையாடுமாறு தெரிவித்தார்.


"தலைசிறந்த வீரர் சூர்யகுமார் யாதவ்"


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவின் ஆட்டம் குறித்து விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






அதில் அவர் கூறியதாவது, ” உலகின் தலை சிறந்த வீரர் என்பதை சூர்யகுமார் யாதவ் நிரூபித்துள்ளார். ஆட்டத்தை நேரில் பார்க்கவில்லை என்றாலும் அவரது இன்னிங்ஸ் வீடியோ கேம்மில் ஆடுவது போல இருந்திருக்கும் என்பது உறுதி” என விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் சூர்ய குமார் யாதவின் இந்த இன்னிங்சை பாராட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.


முன்னணி வீரர்களுக்கு ஓய்வு :


ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்திய அணிக்கு நியூசிலாந்து நாட்டிற்கு பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் நியூசிலாந்து நாட்டில் உள்ள பே ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ள இரண்டாவது டி20 போட்டியானது தொடரை வெல்ல இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக உள்ளது.  


டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துணைக் கேப்டன் கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோருக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.