Kohli Rahul: ஆடுகளத்தில் மூத்த வீரர்களின் அறிவுரைகளை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என, கே.எல். ராகுலுக்கு இணையத்தில் ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

Continues below advertisement

சர்ச்சையில் கே.எல். ராகுல்:

 சொந்த மண்ணில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இதனால் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஒருநாள் தொடரை,  கோலி, ரோகித் மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோரின் அட்டகாசமான பேட்டிங்கால் கே.எல். ராகுல் தலைமையிலான அணி வென்றது. குறிப்பாக இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் விளாசிய கோலி, தொடர் நாயகன் விருது வென்றார். அதேநேரம், விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், கேப்டன் கே. எல். ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலியை அவமதித்ததாக வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

நடந்தது என்ன?

வீடியோவின்படி, 44.4 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்கா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை எடுத்து இருந்தது. அப்போது ரோகித் சர்மா ஸ்லிப்பில் நிற்க, விக்கெட் கீப்பரும், கேப்டனான இடதுபுறமாக பின்பக்கத்தில் கோலி நின்று கொண்டிருந்தார். அப்போது ராகுலுக்கு அருகே வந்த கோலி, இரண்டாவது ஸ்லிப்பை நிறுத்தலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளார். அதனை கவனமாக கேட்டுக் கொண்ட ராகுல், அதெல்லாம் வேண்டும் உங்களது இடத்திற்கு சென்று நில்லுங்கள் என கூறியுள்ளார். தொடர்ந்து முதல் ஸ்லிப்பாக நின்ற ரோகித் சர்மாவை பார்த்து சற்று முன்னே வரும்படி சைகை செய்ய, அதைபார்த்து ரோகித் சர்மாவும் சிரித்தபடி முன்னோக்கி நகர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலியை ராகுல் அவமதித்தாரா?

வீடியோவை பகிர்ந்து வரும் ரசிகர்கள், ”ஒரு மூத்த வீரரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கே. ராகுல் கற்றுக் கொள்ள வேண்டும், மூத்த வீரர்களின் ஆலோசனைகளை பரீசிலிக்க வேண்டும். சர்வதேச அளவில் ஜாம்பவானான விராட் கோலியை அவமதிக்கும்படி எப்படி நடந்து கொள்ளலாம்” என அறிவுரை கூறி வருகின்றனர். மேலும், சிலர் கோலி கோப்பையையே வென்றதில்லை என்பதால் தான், அவரது அறிவுரைகளை ராகுல் மதிக்கவில்லை” என நக்கலாகவும் விமர்சித்து வருகின்றனர்.  அதேநேரம், கோலியின் அறிவுரையை ஏற்று 44வது ஓவரின் கடைசி பந்தில் கே,எல். ராகுல் கூடுதலாக ஒரு ஸ்லிப்பை நிறுத்தினார் என சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.