19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2024ன் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்னும் சற்று நேரத்தில் மோத இருக்கின்றன. இந்திய அணியில் அரையிறுதி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியும், ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டாலும், இறுதிப்போட்டி வரை மூன்று இந்திய வீரர்கள் முக்கிய காரணம். 


அதில் கேப்டன் உதய் சஹாரன், முஷீர்கான், சௌமி பாண்டே ஆகியோருக்கு தலைவலியாக இருந்தனர். இந்தநிலையில், இந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் மூன்று வீரர்களும் எப்படி  செயல்பட்டார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.


கேப்டன் உதய் சஹாரன்: 


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை முழுவதும் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் உதய் சஹாரன் சிறப்பாகவே செயல்பட்டார். இந்த உலகக் கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். உதய் சஹாரன் இதுவரை  6 போட்டிகளில் 64.83 என்ற சராசரியில் 1 சதம், 3 அரைசதங்களுடன் 389 ரன்கள் எடுத்துள்ளார்.  நேபாளத்துக்கு எதிராக சதமும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் 81 ரன்கள் விளாசினார். அதை தொடர்ந்து, அயர்லாந்துக்கு எதிராகவும் உதய் சஹாரன் 75 ரன்கள் எடுத்திருந்தார்.






முஷீர் கான்: 






19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் இந்திய வீரர் முஷீர் கான். முஷீர் கான் இதுவரை 6 போட்டிகளில் 67.60 என்ற சராசரியில் 2 சதங்கள், ஒரு அரைசதத்துடன் 338 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முஷீர் கான் 131 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் அயர்லாந்துக்கு எதிராக 118 ரன்களும்,  அமெரிக்காவுக்கு எதிராக 73 ரன்களும் எடுத்தார்.


சௌமி பாண்டே:






19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் சௌமி பாண்டே சிறந்த பந்துவீச்சாளராக ஜொலிக்கிறார்.  இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், இந்திய தரப்பில் முதல் இடத்திலும் உள்ளார். சௌமி பாண்டே இதுவரை 6 போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நேபாளத்துக்கு எதிராக 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும்,நியூசிலாந்துக்கு எதிராக 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் இவர்கள் மூவரும் மீதுதான் இருக்கும்.