ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறது. இந்த முறை கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட இந்தியா, தொடர்ச்சியாக பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இதில் முக்கியமான தோல்வியாக பாகிஸ்தான் போட்டிதான் பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை ஒருமுறை கூட பாகிஸ்தானிடம் தோல்வியே பெறவில்லை என்ற சாதனை இந்தாண்டு தகர்ந்தது. அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில் மிக மோசமாக தோல்வி பெற்றது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள், சமூக வலைதளங்கள் மூலமாக வீரர்களை மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை மத ரீதியாக விமர்சனம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விராட் கோலி கண்டனம் தெரிவிக்க முடிவுற்றது. இந்நிலையில் விராட் கோலிக்கே தற்போது அநீதி நடந்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் 20 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குப் பின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரது மதத்தைக் குறிப்பிட்டு அவரையும் அவரது குடும்பத்தாரையும் தரக்குறைவாக விமர்சித்தனர். அப்போது அணியின் தலைவர் என்ற முறையில் விராட் கோலி ஷமிக்கு ஆதரவாகப் பேசினார். பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததில் இருந்தே இந்திய அணி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக சக வீரர் முகமது ஷமிக்கு எதிரான மத துவேஷங்களைத் தட்டிக் கேட்டதில் இருந்தே கோலி மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இப்போது அவருடைய பெண் குழந்தைக்கு மிக மோசமாக மிரட்டல் வந்திருக்கிறது. இந்நிலையில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியின் 9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் தருவோம் என மிரட்டல் விடுத்து சில ஆபாசப் பதிவுகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்த மனித்தன்மையற்ற செயலை இன்சமாம் உல் ஹக், முகமது ஆமீர் உள்ளிட்டோர் கடுமையாக கண்டித்துள்ளனர். இதற்கிடையில் இந்த சர்சை குறித்து டெல்லி மகளிர் ஆணயம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், விராட் கோலியின் குடும்பத்தினருக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. விசாரணையில் இருக்கும்போதே அது ஒரு பாகிஸ்தான் ஐடி என்பதால் பாகிஸ்தானியர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் விசாரணையில் அந்த ஐடி இந்தியாவை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஐடி 2021 ஏப்ரலில் தான் தொடங்க பட்டுள்ளது என்றும், அதில் இருந்து நிறைய இந்தியர்களுடன் தான் உரையாடல்கள் நடந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக சில தெலுங்கு ட்வீட்ஸ் இருப்பதாகவும் தெரிகிறது. இந்தியர்கள் கோலியின் மீதான வெறுப்பில் இப்படி செய்திருப்பது பலரின் வருத்தத்தை பெற்றிருக்கிறது. விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அதன் மூலம் பெரும் பெரும் சர்ச்சைகளை உண்டு செய்வது உலக நாடுகள் மத்தியில் இந்தியர்கள் மீதான மதிப்பை வெகுவாக குறைக்கும் என்று சமூக வலைதளங்களில் பலர் தங்களது வருதங்களை தெரிவித்து கொண்டுள்ளனர்.