ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் ஒரு பொற்காலம் இருப்பது போல, இருண்ட காலமும் இருக்கும். 2000-த்திற்கு பிறகு பொற்காலமாக சென்று கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு இது இருண்ட காலம் என்றே சொல்லும் நிலை உருவாகியுள்ளது.

Continues below advertisement

இருண்ட காலம்:

இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலத்திற்கு கம்பீரே காரணம் என்ற நிலையும் உருவாகியுள்ளது. அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி மிக மோசமாக ஆடி வருகிறது. குறிப்பாக, பல ஆண்டுகளாக இந்திய அணி தன்வசம் வைத்திருந்த பெருமையை கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி தாரை வார்த்து வருகிறது.

புள்ளிவிவரம் சொல்வது என்ன?

கம்பீரின் பயிற்சி காலத்தில் இந்திய அணியின் தோல்விகளை கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement

1. இலங்கைக்கு எதிராக 27 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை இழந்தது

2. இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 30 விக்கெட்டுகளையும் இழந்தது

3. 45 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறாதது

4. 36 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் டெஸ்ட் போட்டியில் தோற்றது

5. 19 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தோற்றது

6. சொந்த மண்ணில் முதன்முறையாக 50 ரன்களுக்கும் குறைவாக எடுத்தது

7. 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது

8. 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் தோற்றது

9. வான்கடே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் தோற்றது

10. இந்திய டெஸ்ட் வரலாற்றில் சொந்த மண்ணில் 200 ரன்களுக்கும் குறைவான இலக்கை எட்ட முடியாமல் தோற்றது

11. இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக 3-0 என்ற கணக்கில் இழந்தது

12. மெல்போர்னில் 13 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் தோற்றது

13. 10 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்தடுத்து டெஸ்ட் தொடரை இழந்தது

14. 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்தது

15. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை முதன்முறையாக தவறவிட்டது

16. 5 சதங்கள் விளாசப்பட்டும் ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்ற முதல் அணி ( லீட்ஸ் - இங்கிலாந்து)

17. 92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் வரலாற்றில் 350 ரன்கள் இலக்கை தடுக்க முடியாமல் 2வது முறையாக தோல்வி ( லீட்ஸ்)

18. இங்கிலாந்திற்கு எதிராக 2வது முறையாக 200 ரன்களுக்கும் குறைவான இலக்கை எட்ட முடியாமல் தோல்வி

19. 11 வருடங்களுக்கு பிறகு ஒரே இன்னிங்சில் 600 ரன்களை விட்டுக்கொடுத்தது ( மான்செஸ்டர்- இங்கிலாந்து)

20. அடிலெய்டில் 17 வருடங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் தோற்றது

21. 124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் சொந்த மண்ணில் டெஸ்ட் தோற்றது

21. 15 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக இருந்து கம்பீர் கோப்பையை வென்று தந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு பிசிசிஐ பயிற்சியாளர் பதவியை தந்தது. ஆனால், அவர் பயிற்சி காலத்தில் ரோகித் சர்மா, கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது, ரோகித் சர்மா கேப்டன்சி பறிக்கப்பட்டது, ஹர்திக் பாண்ட்யாவிற்குச் செல்ல வேண்டிய ஒருநாள் கேப்டன்சி கில்லுக்குச் சென்றது என பல அதிரடி சம்பவங்கள்தான் அரங்கேறியது. சாம்பியன்ஸ் டிராபி மட்டுமே கம்பீர் பயிற்சியின் கீழ் இந்தியா வென்றது.